Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இளையனார்வேலுார் முருகன் கோவிலில் ... கோவை தண்டு மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா: பக்தர்கள் நேர்த்திக்கடன் கோவை தண்டு மாரியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆதி சங்கரர் ஜெயந்தி : காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சிறப்பு வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஆதி சங்கரர் ஜெயந்தி : காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள்

21 ஏப்
2026
04:04

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள காலடியில் கடவுள் பக்தி கொண்ட சிவகுரு, ஆர்யாம்பாள் என்ற தம்பதிக்கு தெய்வீகக் குழந்தையாக இந்த பூமியில் அவதரித்தவர் ஆதி சங்கரர். 32 ஆண்டுகள் பூமியில் வாழ்ந்தார். 8 வயதில் வேதமும், 12 வயதில் சாஸ்திரமும், 16 வயதில் பாஷ்யமும் முழுவதையும் கற்றுத் தேர்ந்தார். சங்கரர் சனதான தர்மத்தை, அத்வைதம், வேதத்தை நமக்கு போதித்தார்.


பக்திதான் பட்டிதொட்டி எங்கும் ஊடுருவி, ஆன்மிகத்தை அணு அணுவாகப் பரப்பி, தேசத்தையே செழிப்பாக்கி இருக்கிறது. ஆதி சங்கரர், ஸ்ரீமத் ராமானுஜர், ஸ்ரீமத்வர் போன்ற மகான்கள் பல்வேறு காலகட்டங்களில் அவதரித்து, பக்தி தழைத்தோங்க வலுவான உரமிட்டார்கள்; விருட்சமாக வளர்த்தார்கள். ஆன்மிகத்தை, அடித்தட்டில் இருக்கிற பாமரனிடமும் கொண்டு போய்ச் சேர்க்க மடங்களும், ஆதீனங்களும் பெரிதும் பாடுபடுகின்றன. அவற்றுள் ஆதி சங்கரரால் ஸ்தாபிக்கப்பட்ட காஞ்சி காமகோடி பீடமும் குறிப்பிடத்தக்க ஒன்று.


கயிலாயத்தில் சிவபெருமானிடம் இருந்து ஆதிசங்கரர் பெற்ற பஞ்ச லிங்கங்களுள் ஒன்றான சந்திர மவுலீஸ்வரர் தான் காஞ்சி பீடத்தின் முக்கிய வழிபட்டு விக்கிரகம். காஞ்சி காமகோடி பீடத்தின் ஆச்சார்யாக்கள் இதற்கு பூஜைகள் செய்ய வேண்டும். அதைத் தரிசிக்க பக்தர்கள் நாள்கணக்கில் மடத்திலேயே தங்குவது உண்டு. 2,500 ஆண்டுகளைக் கடந்தும் இந்த

பூஜை, ஸ்ரீமடத்தில் நடந்து வருகிறது. விழாவில் பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிஜி மற்றும் பூஜ்யஸ்ரீ சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் பங்கேற்று சிறப்பு பூஜைகள் செய்தனர்.


சென்னை, மாங்காட்டில் அமைந்துள்ள காமாட்சி அம்மன் கோவிலில், அம்பாள் தவம் புரிந்த இடத்தில், ஆதிசங்கரர், அஷ்ட கந்தம் எனும் எட்டு மூலிகைகளால் ஆன, அர்த்தமேரு ஸ்ரீ சக்கரத்தை பிரதிஷ்டை செய்தார். அதுவே, இக்கோவிலின் பிரதானமாக கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், ஆதிசங்கரர் ஜெயந்தி, இக்கோவிலில் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் படி, ஆதி சங்கரர் ஜெயந்தியான இன்று காலை கோவில் மகா மண்டபத்தில் அமைந்துள்ள ஆதிசங்கரர் சுவாமிக்கு, சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.


ஆதி சங்கரர் ஜெயந்தியை முன்னிட்டு காஞ்சிபுரம், காலடி, பசுபதிநாத் மந்திர், காத்மாண்டு, நேபால், வாரணாசி, உத்தரபிரதேசம், குவஹாத்தி, அசாம்- பாலாஜி மந்திர், மா காமாக்யா, ஷங்கர்தேவ் நேத்ராலயா, காஞ்சனேஷ்வர் மகாதேவ் மந்திர், ராணிபூல், சிக்கிம் சங்கர் மடம், பூரி, ஒடிசா, புது தில்லி, அமிர்தசரஸ், பஞ்சாப், சண்டிகர், கோவா, புனே, மகாராஷ்டிரா, காஷ்மீர், கன்னியாகுமரியில் உள்ள ஸ்ரீமடங்களில் ஆதிசங்கரருக்கு விசேஷ அபிஷேகம் மற்றும் தீபாராதனை, ஆதி சங்கரர் அவதார கட்ட பாராயணம், மகாபிஷேகம், ரிக் சம்ஹிதா ஹோமம், ரிக் வேதம், யஜுர் வேத க்ரம பாராயணம் ஆகியவை நடைபெற்றது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநள்ளாறு: காரைக்கால் திருநள்ளாறு கோவிலில் புரட்டாசி சனியை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் புரட்டாசி முன்னிட்டு இன்று முத்தங்கி சிறப்பு ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனி கிழமையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar