பதிவு செய்த நாள்
18
ஜன
2013
11:01
ஈரோடு: ஈரோடு, ஜேஸீஸ் பள்ளியில், பா.ஜ., சார்பில் பாதயாத்திரையாக பழனிக்கு செல்லும் முருக பக்தர்களுக்கு, இலவச மருத்துவ முகாம் நடந்தது. ஈரோட்டில் இருந்து பல்லாயிரக்கணக்கான முருக பக்தர்கள், பழனி தைப்பூச விழாவுக்காக பாதயாத்திரையாக செல்கின்றனர். பாதயாத்திரை செல்லும் முருக பக்தர்களுக்காக, ஈரோடு ஜேஸீஸ் பள்ளியில், பா.ஜ., சார்பில், இலவச மருத்துவ முகாம் நடந்தது. காசிபாளையம் மண்டல தலைவர் திருமூர்த்தி தலைமை வகித்தார். ஆர்.எஸ்.எஸ்., கோட்ட பொறுப்பாளர் ஜெகதீஷ் முகாமை துவக்கி வைத்தார்.முருக பக்தர்களுக்கு களைப்பை போக்க சுக்கு காபி, கை, கால் வலியினால் சிரமப்படும் பக்தருக்கு, சித்த மருத்துவ வலி நிவாரணி மாத்திரையும், மூலிகை எண்ணெய் மசாஜ் ஆகியவற்றை பா.ஜ.,வினர் வழங்கினர். மாவட்ட இளைஞர் அணி துணைத் தலைவர் சுந்தரநாராயணன் வரவேற்றார். மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் பழனிச்சாமி, கோட்ட பொறுப்பாளர் வைரவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.