Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இன்று சஷ்டி, திருவாதிரை விரதம்: ... கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம் கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேதகிரீஸ்வரர் கோவிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வேதகிரீஸ்வரர் கோவிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

22 ஏப்
2026
12:04

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில், சித்திரை பெருவிழா, கொடியேற்றத்துடன் துவங்கியது.


திருக்கழுக்குன்றத்தில், பிரசித்தி பெற்ற வேதகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் சிவபெருமான் திருவடியில், நான்கு வேதங்களே வேதமலைக் குன்றுகளாக வீற்றுள்ளன. அதர்வண குன்றில், சிவபெருமான் சுயம்புலிங்கமாக தோன்றி, கோவில் கொண்டு, வேதகிரீஸ்வரராக அருள்பாலிக்கிறார். அம்பாள் திரிபுரசுந்தரி அம்மன், தரைப்பகுதியில் உள்ள கோவிலில் அருள்பாலிக்கிறார்.


 இக்கோவிலில் சித்திரை பெருவிழாவிற்காக, கடந்த மார்ச் 6ம் தேதி, கால்கோள்கள் நடப்பட்டது. நேற்று முன்தினம் இரவு, விக்னேஸ்வரர் உத்சவம், மிருத்சங்கரணம் வாஸ்துசாந்தி பூஜை நடந்தது. நேற்று காலை 7:00 மணிக்கு, வேதமந்திரங்கள் முழங்கி, சிறப்பு பூஜையுடன் கொடியேற்றப்பட்டது. அதை தொடர்ந்து, வேதகிரீஸ்வரர், திரிபுரசுந்தரி அம்மன், விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்தி சுவாமியர், மலைக்கோவில் அடிவாரம் சென்றனர். மலைக்கோவிலில் இருந்து, தீபாராதனை பெற்று, மாடவீதிகளில் உலா சென்றனர். இரவு, புண்ணியகோடி விமான வேதகிரீஸ்வரர், பஞ்சமூர்த்தி சுவாமியர் உத்சவம் நடந்தது. சுவாமி, வரும் 30ம் தேதி வரை, தினமும் காலை, இரவு என, வெவ்வேறு வாகனத்தில் சேவையாற்றி, வீதியுலா செல்கிறார். முக்கிய உத்சவங்களாக, வெள்ளி அதிகாரநந்தி சேவையில் வேதகிரீஸ்வரர், 63 நாயன்மார்கள் கிரிவலம், வரும் 27ம் தேதி, பஞ்சமூர்த்தி சுவாமியர் திருத்தேர் உலா நடக்கிறது. நாளை சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவை முன்னிட்டு, 63 நாயன்மார்கள் உத்சவத்தை, காலை 2:00 மணி முதல், 5:00 மணிக்குள் நடத்த, மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவுறுத்தி உள்ளதாக, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சஷ்டி முருகனை வழிபட மிகவும் முக்கியமான விரத நாளாகும். சஷ்டிநாளில் முருகனை வழிபட்டால் நவக்கிரகங்கள் ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar