Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பேராவூரணி நீலகண்ட பிள்ளையார் கோவில் ... வெள்ளிமலை முருகன் கோவில் பெருஞ்சாந்தி பெருவிழா நடந்தது வெள்ளிமலை முருகன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அன்னூர் பெருமாள் கோவிலில் ராமானுஜர் அவதார திருநாள் உற்சவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அன்னூர் பெருமாள் கோவிலில் ராமானுஜர் அவதார திருநாள் உற்சவம்

பதிவு செய்த நாள்

22 ஏப்
2026
01:04

அன்னூர்: அன்னூர், பெருமாள் கோவிலில், ராமானுஜர் அவதார திருநாள் விழா இன்று நடந்தது.


ராமானுஜரின் அவதாரத் திருநாள், ஒவ்வொரு ஆண்டும், சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு உற்சவம் இன்று அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் நடந்தது. காலை 6:00 மணிக்கு, விஸ்வக்சேனா ஆராதனை, புண்யா வாசனம் நடந்தது.  ஓய்வு பெற்ற ஆசிரியர் செந்தில்குமார் எனக்குற்ற செல்வம் ராமானுஜர் என்னும் தலைப்பில் பேசுகையில்," ராமானுஜர் குறித்து முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். வேதத்துக்கு இணையான ஆழ்வார்கள் அருளிய திவ்ய பிரபந்தங்களை வாசித்து உணர வேண்டும். ஸ்ரீமத் நாராயணனே பரம்பொருள் எனத் தெளிந்து அவன் மீது பக்தி செலுத்த வேண்டும். சரீரம் வேறு, ஆத்மா வேறு என்று கூறியவர் ராமானுஜர். நாராயணனின் திருவடிகளில் சரணடைந்தவர்களுக்கு துன்பம் என்பதே இல்லை. புலனடக்கம் ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டும். இந்திரியங்களுக்கு வசப்படக்கூடாது. அற்ப விஷயங்களில் ஆசை கொள்ளக் கூடாது, என ராமானுஜர் அறிவுறுத்தி உள்ளார்," என்றார். காலை 7:45 மணிக்கு மூலவர் ராமானுஜருக்கு அபிஷேக பூஜை, அலங்கார பூஜை, மகா தீபாராதனை நடந்தது. உற்சவர் ராமானுஜர் கோவில் உட்பிரகாரத்தில் உலா வந்து அருள் பாலித்தார். அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூரில் மாத பூசம் தினமான இன்று வள்ளலார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.கடலூர் மாவட்டம், ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar