Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அன்னூர் பெருமாள் கோவிலில் ராமானுஜர் ... வில்லியனுார் மாதா கோவில் திருவிழா அன்னதானம் வழங்கல் வில்லியனுார் மாதா கோவில் திருவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வெள்ளிமலை முருகன் கோவில் பெருஞ்சாந்தி பெருவிழா நடந்தது
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வெள்ளிமலை முருகன் கோவில் பெருஞ்சாந்தி பெருவிழா நடந்தது

பதிவு செய்த நாள்

22 ஏப்
2026
01:04

பந்தலூர்: பந்தலூர் அருகே ஏலமன்னா அருள்மிகு ஸ்ரீ விநாயகர் மற்றும் முருகன் கோவில் பெருஞ்சாந்தி பெருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


பந்தலூர் அருகே ஏலமன்னா பகுதியில், சுமார் 500 அடி உயரம் உள்ள மலை உச்சியில், அருள்மிகு ஸ்ரீ முருகன் திருக்கோவில் அமைக்கப்பட்டது. இதன் கீழ் பகுதியில் ஸ்ரீ விநாயகர் கோவிலும் அமைந்துள்ளது. இந்த கோவில்களின் அஸ்டபந்தன பெருஞ்சாந்தி பெருவிழா கடந்த 20ஆம் தேதி, காலை கொடியேற்று விழா உடன் துவங்கியது. தொடர்ந்து 21ஆம் தேதி ஏலமன்னா ஆற்றங்கரையில் இருந்து ஊர் பொதுமக்கள் முன் நிலையில் புனித கங்கை நீர் மற்றும் முளைப்பாரி எடுத்து வரும் நிகழ்ச்சியும், இரவு எந்திர பிரதிஷ்டை, சங்கல்ப பூஜை, தேவப்பிரதிஷ்டை, மருந்து சாத்துதல் பூஜைகள் நடந்தது. இன்று  காலை மகா கணபதி ஹோமம், தீர்த்த குடங்கள் எடுத்துச் செல்லுதல், விநாயகர் மற்றும் முருகனுக்கு கங்கை நீர் சாற்றுதல், பாலாபிஷேகம், சிறப்பு ஆராதனை., அலங்கார பூஜைகள், தீப திருக்காட்சி மற்றும் பூஜைகள் நடந்தது. முருகன் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம் நடந்தது. நிகழ்ச்சியில் பந்தலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பூஜைகளை நெல்லியாளம் முருகன் கோவில் குருக்கள் சிவ ஸ்ரீ ரவிக்குமார் தலைமையிலான குழுவினரும், கோவில் நிர்வாக தலைவர் பாபு தலைமையிலான கிராம மக்களும் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூரில் மாத பூசம் தினமான இன்று வள்ளலார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.கடலூர் மாவட்டம், ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar