சீர்காழி பிரமபுரீஸ்வரர் கோயிலில் சகோபர திருவிழா: பக்தர்கள் வடம் பிடித்தனர்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஏப் 2026 12:04
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தேவார பாடல் பெற்ற திருநிலைநாயகி உடைனாகிய பிரமபுரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சுவாமி, அம்பாள் 3 நிலைகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். இக்கோயிலின் சித்திரை மாத பிரமோற்சவம் கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடள் தொடங்கி நடைபெற்று வருகிறது. 15 நாட்கள் நடைபெறும் உற்சவத்தின் 5 ம் நாளானை இன்று இரவு முக்குலத்தோர் மண்டகப்படி திருவிழாவான தெருவடைச்சான் எனப்படும் சகோபர திருவிழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு சகோபரத்தில் சுவாமி, அம்பாள் திருஞானசம்பந்தர் சிறப்பு அலங்காரத்தில் ரிஷப வாகனத்தில், பஞ்ச மூர்த்திகளுடன் எழுந்தருளினர். தொடர்ந்து சகோபரத்தை மூமுக. மாநில இளைஞரணி நிர்வாகி வைபவ் வாண்டையார், ஸ்ரீமத் அண்ணாமலை தம்பிரான் முன்னிலையில் வடம் பிடித்து தொடங்கி வைத்தார். இதனையடுத்து பக்தர்கள் சகோபரத்தை வடம் பிடித்து இழுத்தனர். சகோபரம் நான்கு மாட வீதிகளையும் வலம் வந்து நிலையை அடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.