திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் உள்ள தட்சிணாமூர்த்தி தனிச்சிறப்புடன் விளங்குகிறார். இவரது மேல் நோக்கிய வலது கரத்தில் கபாலமும், மேல் நோக்கிய இடது கரத்தில் சூலமும், கீழ் நோக்கிய வலது கரத்தில் சின் முத்திரையும், கீழ் நோக்கிய இடது கரத்தில் சிவஞானபோதமும் காணப்படுகின்றன. திருவடியின் கீழ் ஆமை இருக்கிறது. திருவடி ஆமையை மிதித்திருப்பது புலனடக்கத்தைச் சுட்டிக்காட்டுகிறது. இந்த மூர்த்திக்கு சிவயோக தட்சிணாமூர்த்தி என்று பெயர்.