Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news  தைலாபுரம் திரவுபதி அம்மன் கோவில் ... பழநி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.4.62 கோடி பழநி முருகன் கோயில் உண்டியல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மானாமதுரை சித்திரை திருவிழா:ஆனந்தவல்லி சோமநாதர் திருக்கல்யாணம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மானாமதுரை சித்திரை திருவிழா:ஆனந்தவல்லி சோமநாதர் திருக்கல்யாணம்

பதிவு செய்த நாள்

28 ஏப்
2026
12:04

மானாமதுரை சித்திரை திருவிழாவில் ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர் சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நாளை 70 வருடங்களுக்குப் பிறகு பெரிய தேர்களில் தேரோட்டம் நடைபெற உள்ளது.


சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் நிர்வாகத்திற்குட்பட்ட ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் துங்கியது.விழா நாட்களின் போது அம்மனும்,சுவாமியும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா சென்று வந்தனர்.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணத்திற்காக ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர் சுவாமி பிரியாவிடையுடன் சர்வ அலங்காரங்களுடன் கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த பொன்னம்பலம் பிள்ளை மண்டகப்படிக்கு எழுந்தருளினர். அங்கு பிச்சை ராஜேஷ்,பரத்வாஜ்,முருகன், குமார், உள்ளிட்ட சிவாச்சாரியார்கள் யாகம் வளர்த்து திருக்கல்யாணத்திற்கான பூஜைகளை செய்த பின்னர் சுவாமி, அம்பாள் சார்பில் சிவாச்சாரியார்கள் மாலைகளை மாற்றிக் கொண்டனர். 


காலை 10:55 மணிக்கு சோமநாதர் சுவாமியிடம் இருந்து பெற்ற திருமாங்கல்யத்தை ஆனந்தவல்லி அம்மனுக்கு அணிவித்தனர். அதே நேரத்தில் கோயிலில் திரண்டிருந்த ஏராளமான பெண்கள் தங்களது திருமாங்கல்யத்தையும் மாற்றிக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து அம்மனுக்கும், சுவாமிக்கும் சிறப்பு பூஜைகளும்,தீபாராதனைகளும் நடைபெற்றன.கோயில் வளாகத்திற்குள் நடைபெற்ற திருக்கல்யாண நிகழ்ச்சியை பக்தர்கள் காண்பதற்கு வசதியாக கோயிலின் உள் மற்றும் வெளிப்புறத்தில் அமைக்கப்பட்டிருந்த அகன்ற திரையில் நேரடி காட்சிகளாக ஒளிபரப்பினர். விழாவில் மானாமதுரை தாசில்தார் கிருஷ்ணகுமார் நகராட்சி பொறியாளர் பட்டுராஜன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.திருக்கல்யாணத்திற்கான ஏற்பாடுகளை பொன்னம்பலம் பிள்ளை மண்டகப்படிதார்கள், சிவகங்கை தேவஸ்தான நிர்வாகத்தினர் உள்பட பலர் செய்திருந்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களிடமிருந்து திருக்கல்யாண மொய் வசூல் செய்யப்பட்டது.விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மானாமதுரை போலீஸ் டி.எஸ்.பி.,ராஜா தலைமையிலான போலீசார் செய்திருந்தனர்.இன்று 70 வருடங்களுக்கு பிறகு 2 பெரிய தேர்களில் தேரோட்டம் நடைபெறுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உங்கள் ராசி என்ன? மேஷம் முதல் மீனம் வரை தொழில், குடும்பம், பொருளாதாரம், உடல்நலம் எப்படி இருக்கும். இந்த ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ... மேலும்
 
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் சிமெண்ட் சிலாப் கல்கள் சேதமடைந்து உள்ளதால், ... மேலும்
 
temple news
சுசீந்திரம் ; சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக மற்றும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar