கன்யகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஏப் 2026 12:04
தேனி: தேனி அருகே ஸ்ரீ கன்யகா பரமேஸ்வரி அம்மன் திருக்கோயில் மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சியை கண்டு தரிசித்தனர்.
தேனி மாவட்டம் தேனி அருகே அல்லிநகரத்தில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ கன்யகா பரமேஸ்வரி அம்மன் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்மன் உடனாய ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த திருக்கோயிலில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது .முன்னதாக கோயில் வளாகத்தில் யாககுண்டத்தில் பூர்ணாஹுதி சமர்ப்பிக்கப்பட்டு சிறப்பு ஹோம பூஜை நடைபெற்றது . தொடர்ந்து மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு காப்பு கட்டி திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி தொடங்கியது பின்னர் மாலை மாற்றும் வைபவம் நடைபெற்றது இதில் மூன்று முறை மாலை மாற்றிய பின்பு மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு திருக்கல்யாண வஸ்திரம் மற்றும் பட்டுடுத்தி பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டது . தொடர்ந்து கல்யாண மாங்கல்யத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து தீபாராதனை காட்டிய பின்பு திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் திருக்கல்யாண வைபவத்தை கண்டு தரிசித்தனர். தொடர்ந்து கல்யாண கோலத்தில் காட்சியளித்த மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு தீபாராதனை காட்டப்பட்டது.