சிவகங்கை பட்டமங்கலம் மீனாட்சி-சுந்தரேஸ்வரர் கோயிலின் முன்புள்ள ஆலமரத்தின் அடியில் கார்த்திகைப் பெண்கள் 6 பேரும் சிலை வடிவில் அருள்கிறார்கள். இவர்களுக்கு கிழக்கு நோக்கி அமர்ந்து, அஷ்டமாசித்திகளை சிவபெருமான் போதித்ததாக சொல்கிறது கோயில் ஸ்தல வரலாறு. இந்தக் கோயிலில் பிரதான தெய்வமாக வீற்றிருப்பவர் தட்சிணாமூர்த்தி. இவரை வழிபட்டால் குருவின் அருள் எளிதில் கிட்டும் என்கிறார்கள்.