பதிவு செய்த நாள்
18
ஜன
2013
02:01
திருச்சி முசிறிக்கு அருகில் உள்ளது மங்களம் கிராமம். இங்கே ஊரையும் மக்களையும் காத்தருளும் தெய்வமாக இருந்து அருள்பாலிக்கிறாள் அரவாயி அம்மன். ஆடி மாதம் வந்துவிட்டால், அம்மனுக்கு நடைபெறும் மகாபூஜையில் கலந்துகொள்ள, உலகின் பல நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தி வணங்கிச் செல்கின்றனர். அந்தநாளில், துறையூர் மற்றும் முசிறியில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயங்குமாம்! முசிறி, துறையூர், குளித்தலை, பேட்டாவாத்தலை, ஜீயபுரம் என அக்கம் பக்க ஊர்க்காரர்கள், தங்கள் கோரிக்கைகளை இருந்த இடத்தில் இருந்தே சொல்வார்களாம். அத்தனைக் கோரிக்கைகளும் ஈட÷றிவிடும். இதையடுத்து பக்தர்கள், அம்மனுக்கு அபிஷேகம் செய்தும், புடவை சார்த்தியும், மாவிளக்கு ஏற்றியும் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துவார்கள்.