திபெத், நேபாளம் மற்றும் வட இந்தியாவின் பல இடங்களில் காணப்படும் ஓவியங்களில் நர்த்தன கணபதி பிரதான இடம் வகிக்கிறார். இவர் அந்தி வெயில் போல் மஞ்சள் நிறம் கொண்டவர். ஒரு காலை தாமரை தாங்க, இன்னொரு கால் தூக்கிய திருவடியாகத் தாண்டவமாடும் கணபதியே நர்த்தன கணபதி என வர்ணிக்கின்றன ஞானநூல்கள். வாதாபி, திரிபுவனேஸ்வரம், திருக்கச்சூர், மதுரை ஆகிய தலங்களில் நர்த்தன கணபதியை தரிசிக்கலாம்.