தென்கரை மூலநாதசுவாமி கோயிலில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஏப் 2026 04:04
சோழவந்தான்: தென்கரை மூலநாதசுவாமி கோயிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாணம் நடந்தது.
ருக்மணி சத்யபாமா – நவநீதகிருஷ்ணன் கோயிலில் இருந்து பெண் வீட்டார் சார்பில் சீர்வரிசை எடுத்துவரப்பட்டது. இதைத்தொடர்ந்து மாப்பிள்ளை அழைப்பு நடந்தது. மூலநாதசுவாமி பிரியாவிடையுடன் சிறப்பு அலங்காரத்தில் கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார். பின்பு பூஜைகள் செய்யப்பட்டு அகிலாண்டேஸ்வரி அம்மனுடன் திருக்கல்யாணம் நடந்தது. கண்ணன்பட்டர், அர்ச்சகர் செந்தில், பூஜைகள் செய்தனர். நிர்வாக அலுவலர் கார்த்திகைச்செல்வி ஏற்பாடுகள் செய்திருந்தனர்.
* மன்னாடிமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது. சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் செய்யப்பட்டன. கயிலாயவாத்தியம் முழங்க சுவாமி, அம்மன் கல்யாண மேடையில் எழுந்தருளினர். தொடர்ந்து யாகபூஜைகள் நடந்தன. மாப்பிள்ளை வீட்டாராக கணேசன்பட்டர், பெண் வீட்டாராக சோமசுந்தரம் பட்டர் திருக்கல்யாணத்தை நடத்தினர்.