கோவில்பட்டி கைலாசநாதர் கோயிலில் மீனாட்சி -சொக்கநாதர் திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஏப் 2026 04:04
நத்தம்: நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோயிலில் மீனாட்சி அம்மன், சொக்கநாதர் திருக்கல்யாணம் நடந்தது. இதையொட்டி சுவாமிக்கு 16 வகையான அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க திருக்கல்யாணம் நடந்தது. மணக்கோலத்தில் சுவாமியும் அம்மனும் அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பெண்கள் புதிய தாலிச்சரடு மாற்றிக்கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.