அழகர்கோவிலில் இருந்து தங்கப்பல்லக்கில் மதுரை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஏப் 2026 05:04
மதுரை: மதுரை வைகை ஆற்றில் இறங்க அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், பக்தர்களின் கோவிந்தா கோஷம் விண்னை முட்ட தங்கப்பல்லக்கில் புறப்பட்டார்.
நாளை 30ம் தேதி அதிகாலை 5:30 மணிக்கு மூன்று மாவடியில் எதிர்சேவை நடக்கிறது. இரவு 11:30 மணிக்கு தல்லாகுளம் பெருமாள் கோவிலில் தங்கக்குதிரையில் எழுந்தருளி, ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து கொண்டு புறப்படுகிறார். தமுக்கம் எதிரே, ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளிய பின், மே 1 அதிகாலை 5:30 முதல் 5:55 மணிக்குள் வைகையாற்றில் எழுந்தருளுகிறார். மதியம் ராமராயர் மண்டபத்தில் அங்கப்பிரதட்சணம் நடக்கிறது. அன்றிரவு வண்டியூர் பெருமாள் கோவிலில் எழுந்தருளுகிறார். மே 2 காலை 11:30 மணிக்கு தேனுார் மண்டபத்தில் சேஷ வாகனத்திலும், மதியம் கருட வாகனத்திலும் சுவாமி எழுந்தருளி, மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் தருகிறார். அன்றிரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதார நிகழ்ச்சி நடக்கிறது. மே 4 அதிகாலை பூப்பல்லக்கில் மீண்டும் கள்ளழகராக அழகர்கோவில் நோக்கி சுவாமி புறப்பட்டு, மே 5 காலை 10:40 மணி முதல் 11:10 மணிக்குள் இருப்பிடம் சேருகிறார்.