Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தேனி மாவட்ட சிவன் கோயில்களில் ... கூவாகம் கூத்தாண்டவர் சித்திரை தேரோட்டம்: பல்லாயிரக்கணக்கான தரிசனம் கூவாகம் கூத்தாண்டவர் சித்திரை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவையாறு ஐயாறப்பர் கோவில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
திருவையாறு ஐயாறப்பர் கோவில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

29 ஏப்
2026
11:04

தஞ்சாவூர்: திருவையாறு ஐயாறப்பர் கோவில் சித்திரை தேரோட்டம் வெகு விமர்சையாக நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.


தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில், தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான, ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி அம்பாள் சமேத  ஐயாறப்பர் கோவில் உள்ளது. இக்கோவில், சித்திரை திருவிழா கடந்த ஏப்.21ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மே மாதம் 3ம் தேதி வரை 13 நாள் இவ்விழா நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம்  இன்று (29ம் தேதி) காலை ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகியுடன் தேரில் அமர்ந்து பஞ்ச மூர்த்திகளுடன் திருவையாறு நான்கு வீதிகளிலும் தேர் உலா வந்தது. பிறகு தேரில் ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகியுடன் தேர்தலில் எழுந்தருளினர். தேரினை, கட்டளை விசாரணை ஸ்ரீமத் சொக்கலிங்க தம்பிரான் சுவாமிகள், சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேர் நிலைக்கு வந்ததும் பொதுமக்கள் தீபாராதனை காட்டி சாமி தரிசனம் செய்தனர். அதை தொடர்ந்து மே 2ம் தேதி சப்தஸ்தான பெருவிழா நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு காலை 5.30 மணிக்கு ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகியுடன் கண்ணாடி பல்லக்கிலும், நந்திகேஸ்வர் சுயசுவாம்பிகையுடன் வெட்டிவேர் பல்லக்கில் புறப்பட்டு திருப்பழனம், திருசோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, சென்று அன்று இரவு காவிரி ஆற்றில் 6 ஊர் பல்லக்குகளும் தில்லைஸ்தானத்தில் சங்கமிக்கிறது. இரவு தில்லைஸ்தானம் காவிரி ஆற்றில் வானவேடிக்கை நடைபெறுகிறது. 


மறுநாள் மே 3ம் தேதி தில்லைஸ்தானம் பல்லக்குடன் 7 ஊர் பல்லக்களும் திருவையாறு வீதிகளில் உலா வந்து தேரடியில் பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பொம்மை பூ போடும் நிகழ்ச்சி முடிந்தவுடன் 6 ஊர் பல்லக்குகளும் கோவிலுக்கு சென்று தீபாரதனை முடிந்து அந்தந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்லும். விழா ஏற்பாடுகளை 27வது தருமபுர ஆதினம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்தபரமாசாரிய சுவாமிகளின் வழிகாட்டுதலின்படி தேவஸ்தான கட்டளை விசாரணை ஸ்ரீமத் சொக்கலிங்க தம்பிரான் சுவாமிகள் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், மாசி வீதிகளில் கோலாகலமாக துவங்கியது. ... மேலும்
 
temple news
வாரணாசி: பிரதமர் மோடி வாரணாசியில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருவாரூர்: ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருநெல்லிகாவல் நெல்லிவன நாதர் சுவாமி ஆலய திருத்தேரோட்டம் இன்று ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: உளுந்தூர்ப்பேட்டை கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை தேரோட்டம் இன்று நடைபெற்றது. ... மேலும்
 
temple news
இலஞ்சி: இலஞ்சி திருவிலஞ்சிக்குமாரர் கோவிலில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar