திருவாரூர் நெல்லிவனநாதர் சுவாமி கோவிலில் தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஏப் 2026 11:04
திருவாரூர்: ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருநெல்லிகாவல் நெல்லிவன நாதர் சுவாமி ஆலய திருத்தேரோட்டம் இன்று விமர்சையாக நடைபெற்றது ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்
திருவாரூர் மாவட்டம் திரு நெல்லிக்காவல் பகுதியில் அமைந்துள்ள மங்களாம்பிகை உடனுறை அருள்மிகு நெல்லிவன நாத சுவாமி திருக்கோயில் சித்திரை பெருந்திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த 20ம் தேதி முதல் பல்வேறு சுவாமி வீதி உலா நடைபெற்ற நிலையில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது குறிப்பாக இந்த திருத்தேரோட்டமானது இன்று காலை 9 மணி அளவில் தியாகராஜ சாமிக்கு தீபாரதனை காட்டப்பட்ட நிலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். இந்த தேர்த்திருவிழாவில் திருநெல்லி காவல் மட்டும் அல்லாமல் அருகில் உள்ள நால்ரோடு கச்சனம் செருவாமணி சேந்தங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆரூரா தியாகேசா என கோஷங்கள் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் எந்தவித ஒரு அசம்பாவிதங்களும் ஏற்படாத வகையில் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..