கன்னியாகுமாரி உண்டனாகுழி கிருஷ்ண சுவாமி கோவிலில் மஹா கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஏப் 2026 12:04
கன்னியாகுமாரி: பிரசித்தி பெற்ற உண்டனாகுழி ஶ்ரீ கிருஷ்ண சுவாமி கோவில் மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
கன்னியாகுமாரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த உண்டனாகுழி ஶ்ரீ கிருஷ்ண சுவாமி கோவில் 62 வது ஆண்டு திருவிழா மற்றும் பிரதிஷ்டை விழா கடந்த 25 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனை ஒட்டி இன்று கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக யாகசாலை பூஜைகள், கலச ஸ்தாபனம், பிராண பிரதிஷ்டை, மற்றும் புனித நீர் கலசங்கள் மூலம் கோபுர கலசங்களுக்கும் விக்ரகங்களுக்கும் அபிஷேகம் போன்ற சடங்குகள் நடைபெற்றது. தொடர்ந்து புனித நீர் நிரப்பப்பட்ட கும்பங்கள் அலங்கரிக்கப்பட்டு, யாகசாலையில் வைத்து மந்திரங்கள் முழங்க தெய்வ சக்தியை கும்பத்தில் எழுந்தருளச் செய்து யாகசாலை பூஜைகளின் நிறைவாக கலச அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித நீர் கோபுர கலசங்களிலும், விக்ரகங்களிலும் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.