Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சாரங்கா...கோவிந்தா... என கோஷம் முழங்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உத்தரகோசமங்கையில் திருக்கல்யாண உற்ஸவம் ஏராளமானோர் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
உத்தரகோசமங்கையில் திருக்கல்யாண உற்ஸவம் ஏராளமானோர் பங்கேற்பு

பதிவு செய்த நாள்

30 ஏப்
2026
10:04

உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் உள்ள மங்களேஸ்வரி அம்மன் கோயில் சித்திரை பெருவிழா திருக்கல்யாண உற்ஸவம் கோலாகலமாக நடந்தது. ஏப்.,21ல் காப்பு கட்டு தலுடன் விழா துவங்கியது. நாள்தோறும் சிறப்பு பூஜைகள் மற்றும் விசேஷ வாகனங்களில் நான்கு ரத வீதிகளிலும் புறப்பாடு நடந்து வருகிறது. நேற்று மாலை 5:00 மணிக்கு உத்தரகோசமங்கை மங்களேஸ்வரி அம்மன் சன்னதி முன்புறம் உள்ள அலங்கார திருக் கல்யாணம் மண்டபத்தில் உற்ஸவம் நடந்தது. முன்னதாக மாப்பிள்ளை மற்றும் பெண் வீட்டார் அழைப்பு நடந்தது. பல்வேறு வகையான சீர்வரிசை பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இரவு 7:00 மணிக்கு உற்ஸவ மூர்த்திகளான மங்களேஸ்வரி அம்மன், மங்களநாதர் சுவாமி, பிரியாவிடை உள்ளிட்ட சுவாமிகள் அலங் கார மண்டபத்திற்கு கொண்டுவரப்பட்டனர். கோயில் ஸ்தானிக சிவாச்சாரியார்களால் அம்மன் கழுத்தில் மங்கள நாண் சூட்டப்பட்டது. பக்தர்கள் மீது புனித நீர் மற்றும் அட்சதை துாவப்பட்டது. பக்தர் களுக்கு தாம்பூல பிரசாதம் வழங்கப்பட்டது. இரவில் சுவாமி யானை வாகனத்திலும், அம்மன் புஷ்ப பல்லக்கிலும் உத்தரகோசமங்கை நான்கு ரத வீதிகளிலும் மேள தாளங்கள், வாண வேடிக்கை முழங்க உலா வந்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர் வாகத்தினர் செய்திருந்தனர். இன்று(ஏப்.,30) மாலை 4:00 மணிக்கு உத்தரகோசமங்கையில் பெரிய தேரோட்டம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக மதுரை மாநகருக்குள், கண்டாங்கி பட்டுடுத்தி தங்க ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சாரங்கபாணி சுவாமி ... மேலும்
 
temple news
சித்திரை திருவிழாவின் பன்னிரண்டாம் நாளான இன்று சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் ரிஷப வாகனத்தில் பவனி ... மேலும்
 
temple news
சிவகாசி: சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் சித்திரைப் பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை வைகை ஆற்றில் இறங்க அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், பக்தர்களின் கோவிந்தா கோஷம் விண்னை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar