Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் ... கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் நாளை தேரோட்டம் கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உத்திரமேரூர் சுந்தர வரதர் கோவிலில் தேர் திருவிழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
உத்திரமேரூர் சுந்தர வரதர் கோவிலில் தேர் திருவிழா கோலாகலம்

பதிவு செய்த நாள்

30 ஏப்
2026
03:04

உத்திரமேரூர்: உத்திரமேரூர், சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ விழாவையொட்டி தேர் திருவிழா கோலாகலமாக இன்று நடந்தது.


உத்திரமேரூரில், 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆனந்தவல்லி நாயகா சமேத சுந்தர வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது.  இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் பிரம்மோத்சவ விழா நடப்பது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று இரவு ஸ்ரீதேவி, பூதேவியுடன் சுந்தர வரதராஜ பெருமாள், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். கடந்த 26ம் தேதி கருடசேவை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, சுந்தர வரதராஜ பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதை தொடர்ந்து, தினமும் இரவு நேரங்களில் சிம்ம வாகனம், ஹனும வாகனம், யானை வாகனங்களில் சுவாமி வீதியுலா மற்றும் சிறப்பு பூஜைகளும், ஆராதனையும் நடந்தன. இன்று காலை 6:30 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட தேரில், ஸ்ரீதேவி, பூதேவியுடன் சுந்தர வரதராஜ பெருமாள் எழுந்தருளி ஊர்வலமாக புறப்பட்டார். உத்திரமேரூர் நகர் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்து, காலை 9:00 மணிக்கு கோவிலை வந்தடைந்தார். இதில், உத்திரமேரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தீபம் ஏற்றி வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதை தொடர்ந்து அழகரைகுளிர்விக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ... மேலும்
 
temple news
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் பெருமாள் ... மேலும்
 
temple news
பட்டிவீரன்பட்டி; சித்தரேவு வரதராஜபெருமாள் கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் ஏப்.20ல் நடந்தது. ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூர் கொட்டகுடி ஆற்றில் ஸ்ரீரங்கம் வைணவ முறைப்படி செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar