பதிவு செய்த நாள்
03
மே
2026
12:05
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, காளியண்ணன்புதூர் மீனாட்சி அம்மன் உடனமர் சுந்தரேஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா நடக்கிறது.
கிணத்துக்கடவு, கோவில்பாளையம் அருகே உள்ள காளியண்ணன்புதூர் மீனாட்சி அம்மன் உடனமர் சுந்தரேஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா நிகழ்ச்சிகள் 3ம் தேதி, வாஸ்து சாந்தி மற்றும் கிராம சாந்தியுடன் துவங்கியது. 4ம் தேதி, மாலை 5:00 மணிக்கு, திருஆபரண பெட்டி அழைத்து வருதல் நடக்கிறது. இரவு 10:00 மணிக்கு, சக்தி கலசம் அழைக்கும் நிகழ்வு நடக்கிறது. 5ம் தேதி, காலையில், மாவிளக்கு அழைத்தல், சுவாமி திருக்கல்யாண வைபவம், பக்தர்களுக்கு அன்னதானம் நடக்கிறது. மதியம் 2:30 மணிக்கு, பூவோடு எடுக்கும் நிகழ்வு நடக்கிறது. இரவு 7:00 மணிக்கு, சக்தி கலசம் கங்கையில் சேர்க்கும் நிகழ்வு நடக்கிறது. 6ம் தேதி, காலை 5:00 மணிக்கு, மதுரைவீரன் சுவாமிக்கு அபிஷேக, ஆராதனை நடக்கிறது. 7ம் தேதி, காலை 7:30 மணிக்கு, மஞ்சள் நீர் மற்றும் சுவாமி திருவீதி உலா நடக்கிறது. 8ம் தேதி, காலை 6:30 மணிக்கு, சுவாமிக்கு மகா அபிஷேகம் நடக்கிறது.