முத்தாட்சி அம்மன் கோவில் சித்திரை உற்சவம்: காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்தி்க்கடன்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06மே 2026 03:05
மயிலாடுதுறை: நாஞ்சில் நாட்டில் அமைந்துள்ள முத்தாட்சி அம்மன் ஆலய சித்திரை உற்சவம், ஏராளமான பக்தர்கள் பால்காவடி எடுத்து வந்தும், அலகு காவடி எடுத்து வந்தும் வழிபாடு, 16 அடி நீள அலகை குத்தியபடி பக்தர்கள் பரவசத்துடன் ஆடிய காட்சி மெய்சிலிர்க்க வைத்தது.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மேலநாஞ்சில்நாட்டில் பழமை வாய்ந்த முத்தாட்சி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தில் ஆண்டு சித்திரை திருவிழா காப்பு கட்டுதலுடன் துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய அம்சமான காவடி திருவிழா மற்றும் பால்குட ஊர்வலம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு காவிரி ஆற்றங்கரையில் இருந்து பால்குட ஊர்வலம் நடைபெற்றது, கோயில் பூசாரி சக்தி கரகம் முன்னே செல்ல, நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடங்களை சுமந்து வந்தனர். தொடர்ந்து அழகு காவடி ஊர்வலம் நடைபெற்றது. இதில் 16 அடி நீளம் உள்ள அலகை வாயில் குத்தியபடி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள் மேளதாளங்களுக்கு முழங்க பக்தி பரவசத்துடன் ஆடிய காட்சி பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைத்தது. ஊர்வலம் ஆலயத்தை அடைந்ததை தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.