தேய்பிறை பஞ்சமி: ஜலகண்டேஸ்வரர் சித்தர் பீடத்தில் வாராஹி அம்மனுக்கு அபிஷேகம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06மே 2026 03:05
கோவை : தேய்பிறை பஞ்சமி தினத்தை முன்னிட்டு கோவை உக்கடம் சுண்டக்கா முத்தூர் பைபாஸ் ரோடு சுயம்பு ஜலகண்டேஸ்வரர் சித்தர் பீடத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் அமைந்துள்ள வாராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் பூஜை நடந்தது இதில் சர்வ அலங்காரத்துடன் வாராஹி அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியின் நிறைவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.