Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவகாசி பத்ரகாளியம்மன் கோவிலில் ... ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயிலில் விருப்பன் திருநாள்: நம்பெருமாள் புறப்பாடு ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உத்தரகோசமங்கையில் மண்வெட்டியால் சாதம் கிளறி பக்தர்களுக்கு அன்னதானம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
உத்தரகோசமங்கையில் மண்வெட்டியால் சாதம் கிளறி பக்தர்களுக்கு அன்னதானம்

பதிவு செய்த நாள்

07 மே
2026
11:05

உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயில் பின்புறம் கண்மாய் கரையோரம் பழமை வாய்ந்த கோவிந்த பெருமாள் கோயில் உள்ளது.


இங்கு சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பல்வேறு மண்டகப் படியை கடந்து மீண்டும் அழகர் கோயிலில் தனது இருப்பு நிலையை அடைந்த பின் இக்கோயிலில் தலுகை எனப்படும் அன்னதானம் விழா நடக்கிறது. இதற்காக பத்து நாட்களுக்கு முன்பாகவே உத்தரகோசமங்கை யாதவ மக்கள் திரியெடுத்து சுற்றுவட்டார கிராமங்களுக்கு சென்று மேளதளங்கள் முழங்க விதைப்பு என்னும் அரிசி, மிளகாய், பருப்பு உள்ளிட்ட தானியங்களை பெறுகின்றனர். நேற்று முன்தினம் இரவு முதல் கிராம மக்கள் அனைவரும் ஒன்று கூடி காய்கறிகள் நறுக்கும் பணிகளும் பல்வேறு அண்டாக்களில் சமையல் செய்யும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டனர். ஒரு அறையில் பனை ஓலையின் மீது வடித்த சாதம் பெரிய அளவில் கொட்டப்பட்டது.


முன்னதாக மூலவர் கோவிந்த பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு வடமாலை சாற்றப்பட்டது. கோவிந்த பெருமாள் கோயிலில் இருந்து தொட்டுக் கொடுக்கப்பட்ட மண்வெட்டியை கொண்டு குவிக்கப்பட்ட சாதத்தை கிளறி வட்டுகளில் பரிமாறப்பட்டது. மாலை 6:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை தொடர்ந்து பொதுமக்களுக்கு சைவ அன்னதானம் வழங்கப்பட்டது. கோயில் விழா குழுவினர் கூறியதாவது: பல நூற்றாண்டுகளாக தலுகை என்னும் அன்னதான விழாவை விமரிசையாக நடத்தி வருகிறோம். சேற்றை கிளறுவதற்கு பயன்படுவது மண்வெட்டி, அதைப்போல சோற்றை கிளறி விவசாயத்திற்கும், உழவுத் தொழிலுக்கும் சிறப்பு சேர்க்கும் விதமாக இப்பணியை செய்கிறோம் என்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சத்திரம்: திருச்சோபுரம் திருச்சோபுரநாதர் கோவிலில், சுவாமி சிலை மீது சூரிய ஒளிபடும் அதிசய ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் பாலமலை வழியாக மேல்முடி ரங்கநாதர் கோயில் செல்ல விரும்பிய, 500 ... மேலும்
 
temple news
சென்னை: சாய்பாதானந்தா திரைப்படம் குரு பக்தியின் உச்சம் என, திரைப்பட கலைஞர்கள் பாராட்டு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூதநாராயண பெருமாள் கோவிலில் மத்யாஷ்டமியை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: புரட்டாசி மாத திருவாதிரை திருமஞ்சனத்தையொட்டி, காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் நேற்று, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar