நத்தம்; நத்தம் அருகே ஆவிச்சிபட்டி மந்தை முத்தாலம்மன், பகவதி அம்மன் கோவில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு முத்தாலம்மன் மற்றும் பகவதி அம்மன் கரகம் ஊர்வலமாக கோவிலுக்கு அழைத்து வரப்பட்டது. பின் அம்மன்களுக்கு சிறப்பு அலங்காரமும், அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தது.தொடர்ந்து பக்தர்கள் அக்னிசட்டி, முளைப்பாரி, மாவிளக்கு, கிடாய்கள் வெட்டி தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர். பின்னர் நேற்று மாலையில் தீ வட்டி பரிவாரங்களுடன் பக்தர்கள் புடைசூழ வாண வேடிக்கைகளுடன் அம்மன் மற்றும் கரகம் பூஞ்சோலை சென்றது.விழாவில் சுற்றுவட்டாரங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.