Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி ... சென்னனுார் ராதாகிருஷ்ணர் கோயிலில் மண்டல அபிஷேகம் நிறைவு சென்னனுார் ராதாகிருஷ்ணர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவாரூர் தியாகராஜர் கோவிலில் தெப்ப திருவிழா வெள்ளோட்டம்
எழுத்தின் அளவு:
திருவாரூர் தியாகராஜர் கோவிலில் தெப்ப திருவிழா வெள்ளோட்டம்

பதிவு செய்த நாள்

08 மே
2026
12:05

திருவாரூர்: உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் தெப்ப திருவிழா வெள்ளோட்டம் நடைபெற்றது. 


 பஞ்சபூத தலங்களில் பூமிக்கு உரிய தலமாகவும் சர்வதேச பரிகார தளமாகவும் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும் திருவாரூர் தியாகராஜர் கோவில் விளங்கி வருகிறது. மேலும் சமயக்குறவர்கள் நால்வராலும் பாடல் பெற்ற தலமாகவும் உள்ளது இந்த கோவிலில் மூலவராக வணிகநாதரும் உற்சவர் ஆக தியாகராஜனும் அருள் பாதித்து வருகின்றனர் இந்த கோவிலுக்கு சொந்தமான கமலாலய குளம் சுமார் ஐந்து  வேலி பரப்பளவை கொண்டது. இவ்வாறு சிறப்புமிக்க இந்த கோவிலில் ஆழித்தேரோட்டம் உலக பிரசித்தி பெற்றது. ஆசியாவிலேயே மிகப்பெரிய தேரான ஆழித்தேரோட்டம் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழாவில் ஆயில்ய நட்சத்திரத்தில் நடைபெறும் அதேபோல தெப்ப திருவிழாவும் ஆண்டுதோறும் நடைபெறும்.


இந்த பிரமாண்ட தெப்பம் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் 432 பேரல்களை பயன்படுத்தி 2300 சதுர அடி அகலத்திலும் வண்ண விளக்குகள் அமைக்கப்பட்டு பிரமாண்டமாக தெப்பம் கட்டப்பட்டுள்ளது இந்த தெப்ப தேரோட்டம் நாளை தொடங்கி மூன்று நாட்களுக்கு நடைபெறுகிறது. ஒவ்வொரு நாளும் இரவு பார்வதி சமேத கல்யாண சுந்தரர் எழுந்தருளி தெப்பத்தில் மூன்று சுற்றுகள் கமலாலய குலத்தில் வலம் வர உள்ளனர். நாளை முதல் மூன்று நாட்கள் நடைபெற உள்ள தெப்பத்தை ஒட்டி இன்று வெள்ளோட்ட தெப்பம் நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் வருகை குறித்து வெள்ளோட்ட தெப்ப விழாவை கண்டு தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
குஜராத் மாநிலத்தில், அரபி கடலோரம், கடந்த 1951- மே 11ல், நாட்டின் அப்போதைய ஜனாதிபதி டாக்டர் ராஜேந்திர ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் : நாகலாந்து மாநில கவர்னர் நந்த் கிஷோர் யாதவ், காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மடாதிபதி ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே குட்டூர் மந்தை முத்தாலம்மன் கோவில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து ... மேலும்
 
temple news
பெரியகுளம்: அக்னி நட்சத்திரம் மே 4ல் துவங்கியதால் சிவாலயங்களில் சிவன் திருமேனியின் மீது தாராபாத்திரம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar