Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் ... துடியலூர் சக்தி மாரியம்மன் திருவிழா: சிறப்பு அலங்காரத்தில் அம்மன் துடியலூர் சக்தி மாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கூராங்கோட்டை தர்ம முனீஸ்வரர் கோயிலில் வருடாந்திர உற்ஸவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கூராங்கோட்டை தர்ம முனீஸ்வரர் கோயிலில் வருடாந்திர உற்ஸவம்

பதிவு செய்த நாள்

08 மே
2026
05:05

சாயல்குடி: சாயல்குடி அருகே கூராங்கோட்டை தர்ம முனீஸ்வரர் கோயில் பழமையும் புரதான சிறப்பும் கொண்டதாகும்.


இங்கு கடந்த மே 1., அன்று கோயில் வளாகத்தில் கணபதி ஹோமம், கொடியேற்றம், காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. நேற்று இரவு 7:00 மணிக்கு தர்ம முனீஸ்வரர் புஷ்ப அலங்காரத்துடன் பச்சைப் பல்லக்கில் வெள்ளியிலான தாமரை, திரிசூலம், திருப்பாதங்களுடன் வேட்டை மார்க்கமாக மலட்டாற்று பகுதியில் உள்ள குண்டாற்று கரைக்கு சுத்த பரிபாலனம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இரவில் தெம்மாங்கு கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று காலை 5:00 மணிக்கு கோட்டை விநாயகர், பாலமுருகன், கோட்டை கருப்பசாமி, வீரமாகாளி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுடன் தர்ம முனீஸ்வரருக்கு குண்டாற்று பகுதியில் தீர்த்தவாரி உற்ஸவம் நடந்தது. நேர்த்திக்கடன் பக்தர்கள் பால்குடம், காவடி, அக்னிசட்டி உள்ளிட்டவைகளை எடுத்து கோயிலை வந்து அடைந்தனர். மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கூராங்கோட்டை தர்ம முனீஸ்வரர் கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar