ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாளுக்கு அழகர் பட்டு சாற்றி சிறப்பு பூஜை
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09மே 2026 11:05
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் ஆண்டாளுக்கு அழகர் கொடுத்த பட்டு சாற்றும் வைபவம் நேற்றிரவு நடந்தது. சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு வைகை ஆற்றில் இறங்கும் கள்ளழகர், ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை அணிந்து ஆற்றில் இறங்குவது வழக்கம். இதற்கு எதிர்சீராக மதுரை கள்ளழகர் கோயிலில் இருந்து பட்டு , மங்களப் பொருட்கள் கொண்டு வரப்பட்டு ஆண்டாளுக்கு சாற்றுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் நேற்று இரவு 7:30 மணிக்கு வெள்ளிக்கிழமை குறடு மண்டபத்தில் எழுந்தருளிய ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு கள்ளழகர் கொடுத்து அனுப்பிய பட்டும், ரெங்கமன்னாருக்கு பரிவட்டமும் சாற்றப்பட்டு, மங்கள பொருட்கள் சமர்ப்பிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை செயல் அலுவலர் சக்கரையம்மாள், கோயில் பட்டர்கள் செய்திருந்தனர்.