ராகவன்பேட்டை முத்தால் வாழியம்மன் கோவிலில் தேரோட்டம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09மே 2026 11:05
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த ராகவன்பேட்டை முத்தால் வாழியம்மன் கோவிலில் தேரோட்டம் நடந்தது. அதனையொட்டி, கடந்த 31ம் தேதி கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து தினமும், அம்மனுக்கு சிறப்பு அபிேஷக, அலங்காரமும் வீதியுலாவும் நடந்தது. நேற்று முன்தினம் சக்தி அழைத்தல், காத்தவராயன், பூங்கரகம் ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து, நேற்று காலை 8:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது. மாலை 4:30 மணிக்கு தேரோட்டம் நடந்தது. திரளான பக்தர்கள் தேர் வடம் பிடித்தனர். ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.