Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேட்டுப்பாளையம் மாரியம்மன் கோவிலில் வள்ளி கும்மி ஆட்டம்
எழுத்தின் அளவு:
மேட்டுப்பாளையம் மாரியம்மன் கோவிலில் வள்ளி கும்மி ஆட்டம்

பதிவு செய்த நாள்

12 மே
2026
10:05

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் மகாசக்தி மாரியம்மன் கோவிலில், திருவிழா நடைபெறுவதை அடுத்து, வள்ளி கும்மி அரங்கேற்றம் நடந்தது.


மேட்டுப்பாளையம் பங்களா மேட்டில் உள்ள, மகா சக்தி மாரியம்மன் கோவில், 16ம் ஆண்டு திருவிழா, பூச்சாட்டுதலுடன் துவங்கியது. ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு ராஜபுரத்தில் இருந்து கரகம், பூச்சட்டிகளை பக்தர்கள் கோவிலுக்கு எடுத்து வந்தனர். இரவு ராஜா மகா சக்தி வள்ளி கும்மி குழுவினரின், ஆசிரியர் முத்துசாமி தலைமையில் வள்ளி கும்மி அரங்கேற்ற நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பெண்கள், சிறுவர், சிறுமியர் பங்கேற்று கும்மி அடித்தனர். இரவு அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து, அனைவருக்கும் பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. நாளை (13ம் தேதி) பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள சக்தி விநாயகர் கோவிலில் இருந்து, பால்குடம் எடுத்து வருதலும், மதியம் அம்மனுக்கு அலங்கார பூஜையும், மாலையில் மாவிளக்கு எடுத்து வருதலும் நடைபெற உள்ளது. 14ம் தேதி மஞ்சள் நீராட்டும், 15ம் தேதி மறுபூஜையும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக கமிட்டினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் இளைய மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 27வது ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் திருத்தாண்டக வேந்தர் திருநாவுக்கரசு சுவாமிகள் குருபூஜை ... மேலும்
 
temple news
பெங்களூரு: கர்நாடக ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும், குக்கே சுப்ரமண்யா கோவில், ... மேலும்
 
temple news
சாயல்குடி: சாயல்குடி அருகே மாரியூர் பூவேந்தியநாதர் கோயிலில் தேவாரப் பதிகங்கள் பாடிய திருநாவுக்கரசர் ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி திரவுபதியம்மன் கோவிலில், 11,000 பக்தர்கள் தீமிதித்தனர்.திருத்தணி பழைய தர்மராஜா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar