ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உபகோயிலான லட்சுமணேஸ்வரர் கோயிலில், ஜன., 23 ல் கும்பாபிஷேகம் நடக்கிறது. அடுத்த ஆண்டில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு, கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டு, 9 கோடி ரூபாய் செலவில், திருப்பணிகள் நடக்கின்றன. இக்கோயிலுக்கு முன்னதாக, உபகோயிலான லட்சுமணேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. இதற்காக, 25 லட்ச ரூபாயில் பணிகள் நடந்துள்ளது. ஜன., 23 காலை 9 முதல் 10 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறும்.