Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மல்லம்மாள் காளியம்மன், தர்ம ... உடுமலை சபரி ஐயப்பன் கோவிலில் கும்பாபிஷேக மண்டல பூஜை நிறைவு உடுமலை சபரி ஐயப்பன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளஹஸ்தி சிவன் கோயிலில் சோமநாத் ஸ்வபிமான் பர்வ அகண்ட விஸ்வாசம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காளஹஸ்தி சிவன் கோயிலில் சோமநாத் ஸ்வபிமான் பர்வ அகண்ட விஸ்வாசம்

பதிவு செய்த நாள்

12 மே
2026
11:05

காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் ஸ்ரீ சோமநாதர் கோயில் மீதான தாக்குதல் நடந்து 1000 ஆண்டுகள் (கி.பி. 1026) நிறைவடைந்ததையும், கோயில் புனரமைக்கப்பட்டு 75 ஆண்டுகள் (1951) ஆனதையும் முன்னிட்டு, இந்திய அரசின் கலாச்சார அமைச்சகம் இணைந்து, "சோமநாத் ஸ்வபிமான் பர்வ (ஆயிரம் ஆண்டுகள் நிறைவு விழா) அகண்ட விஸ்வாசம்" என்ற பெயரில்  நினைவு விழா நடத்தப்பட்டது . இந்த நிகழ்ச்சியில், ஸ்ரீகாளஹஸ்தி சிவன்  கோயிலில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தர்ம பிரச்சார ரதம் நான்கு மாட வீதிகளில் ஊர்வலமாக  வலம் வந்தது. பிரச்சார ரதத்துடன், கலைஞர்களின் பஜனைகள், கோலாட்டங்கள், சிவசேவைகர்கள் மற்றும் மங்கள வாத்தியங்கள் கோயிலின் பஜந்திரிகளுடன் இணைந்து ஓம் கார‌  கொடிகளை ஏற்றினர். தொடர்ந்து சோமநாதேஸ்வர சுவாமியின் படம் கோயிலில் இருந்து ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு கோயில் வளாகத்தில் உள்ள கலாச்சார கலை அரங்கில்  சோமநாதேஸ்வர சுவாமியின் உருவப்படம் ஏற்பாடு செய்யப்பட்டு, கோயில் அர்ச்சகர்கள் மற்றும் வேத பண்டிதர்களால்  தீபம் ஏற்றப்பட்டு, பக்தர்களால் ஓம்கார ஜபம், சோமநாத சங்கல்பம் மற்றும் சோமநாத கீதை ஆகியவை பாராயணம் செய்யப்பட்டு, லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. 


காலை 10.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை, ஸ்ரீ சோமநாதர் கோவிலில் இருந்து தேசிய நிகழ்ச்சி நேரலையாக ஒளிபரப்பப்பட்டதை பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் பார்த்து நெகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் பி.கே.வெங்கடேசுலு, அறங்காவலர் குழு தலைவர் கொட்டே. சாய் பிரசாத், உறுப்பினர்கள் குர்ரப்ப செட்டி, கோயில் அதிகாரிகள் ஹேமாவதி,  என்.ஆர்.கிருஷ்ணா ரெட்டி, சீனிவாசராஜூ,.வித்யாசாகர் ரெட்டி, லோகேஷ்பாபு, ஹேமமாலினி, மேற்பார்வையாளர்கள் ஸ்ரீஹரி, ரவி, விஜய சாரதி, தலைமை அர்ச்சகர்கள் சம்மந்தம் குருக்கள், கருணாகர் குருக்கள் மற்றும் வேதப் பண்டிதர்கள்  கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனி கிழமையை ... மேலும்
 
temple news
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி வரதராஜபெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை உற்சவம் ... மேலும்
 
temple news
கோவை; காரமடை அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் புரட்டாசி 3ம் சனிக்கிழமையை முன்னிட்டு இன்று சிறப்பு ... மேலும்
 
temple news
கோவை; புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar