நகரி:அலகாபாத் திருவேணி சங்கமத்தில் குவியும் பக்தர்கள், திருப்பதி வெங்கடேச பெருமாளை தரிசிக்க வசதியாக, அங்கு மாதிரி கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கோவில், கடந்த ஆண்டு செப்டம்பரில் திறந்து வைக்கப்பட்டது. வரும், 24ம் தேதி, திருப்பதி தேவஸ்தானம் சார்பில், அலகாபாத்தில் சிறப்பு ஊர்வலம் நடத்தப்பட உள்ளது. இத்தகவலை, தேவஸ்தான நிர்வாக அதிகாரி சுப்ரமணியம் தெரிவித்தார்.