Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மல்லேஸ்வரம் கங்கம்மா தேவி கோவிலில் ... திருப்பூர் ஸ்ரீமுத்துமாரியம்மன் பொங்கல் திருவிழா நிறைவு திருப்பூர் ஸ்ரீமுத்துமாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமலை திருப்பதிக்கு ‘ஆன்லைன்’ டிக்கெட் முன்பதிவு மையத்தை திறக்க வலியுறுத்தல்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருமலை திருப்பதிக்கு ‘ஆன்லைன்’ டிக்கெட் முன்பதிவு மையத்தை திறக்க வலியுறுத்தல்

பதிவு செய்த நாள்

16 மே
2026
11:05

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தில், கொரோனா ஊரடங்கின்போது மூடப்பட்ட ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு செய்யும் மையத்தை மீண்டும் திறக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் சாலை தெருவில், திருமலை திருப்பதி தேவஸ்தான தகவல் மையம் மற்றும் விருந்தினர் இல்லத்தில், திருப்பதி வெங்கடேச பெருமாளை தரிசனம் செய்வதற்காக, ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் மையம் இயங்கி வந்தது.


ரூ.300 கட்டணம்: இங்கு, காஞ்சிபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த நுாற்றுக்கணக்கான பக்தர்கள், திருப்பதி வெங்கடேச பெருமாளை தரிசனம் செய்ய, 300 ரூபாய் கட்டணத்தில், ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து வந்தனர். கடந்த 2020ம் ஆண்டு கொரோனா ஊரடங்கின் போது, முன்பதிவு மையம் மூடப்பட்டது. கொரோனா ஊரடங்கில் முற்றிலும் தளர்வு ஏற்படுத்தி, இயல்பு நிலை திரும்பி ஆறு ஆண்டுகளுக்கு மேலாகியும், காஞ்சிபுரத்தில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானம் தகவல் மையத்தில், ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் மையம் மீண்டும் திறக்கப்படாமல் உள்ளது.


‘நெட்வொர்க்’ பிரச்னை: இதனால், காஞ்சிபுரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள், தனியாரிடம் கூடுதல் பணம் செலவழித்து முன்பதிவு செய்தாலும், ‘நெட்வொர்க்’ பிரச்னை காரணமாக குறிப்பிட்ட நேரத்தில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய இயலாத சூழல் உள்ளது. எனவே, காஞ்சிபுரத்தில் உள்ள திருமலை, திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தில், சிறப்பு தரிசனத்திற்கான ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் மையத்தை மீண்டும் திறக்க, திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஐப்பசி மாதம் என்பது விசேஷமான மாதம். இந்த மாதத்தில் வருகிற பிரதோஷம் மகத்துவமானது. பிரதோஷ தினத்தில் இஷ்ட ... மேலும்
 
temple news
கோவை: ஐப்பசி மாதம் துவாதசி திதியை முன்னிட்டு கோவை கொடீசியா திருப்பதி வெங்கடாஜபதி கோவிலில் மூலவர் ... மேலும்
 
temple news
பெங்களூரு: பெங்களூரு கங்காதர செட்டி சாலையில் உள்ள மஹான் ஒடுக்கத்துார் சுவாமிகள் மடம் மற்றும் ஸ்ரீ ... மேலும்
 
temple news
திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் உள்ள கல்வெட்டுகளை நகல் எடுத்து, ‘டிஜிட்டல்’ வடிவில் பாதுகாக்க, மத்திய ... மேலும்
 
temple news
கோவை; காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி கோவிலில் ஐப்பசி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு அதிகாலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar