வைகாசி முதல் சோமவாரம்; அமிர்தகடேஸ்வரருக்கு சிறப்பு பூஜை
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18மே 2026 03:05
கோவை: வைகாசி மாதம் முதல் சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு கோவை சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் அருகே அமைந்துள்ள ஸ்ரீ சக்தி விநாயகர் கோவிலில் இருக்கும் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரருக்கு பூஜை மற்றும் அபிஷேகம் நடந்தது. இதில் சிறப்பு அலங்காரத்தில் மூலவர் சிவபெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவபெருமானை தரிசனம் செய்தனர்.