முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே மேலமானாங்கரை கிராமத்தில் சப்த கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.இதனை முன்னிட்டு கணபதி ஹோமம் துவங்கி விக்னேஸ்வர பூஜை,அனுக்ஞை,வாஸ்து சாந்தி, பிரவேச பலி,தனபூஜை,முதல்கால யாக பூஜைகள்,மூல மந்திரங்கள் பூர்ணாஹூதி நடந்தது. இன்று காலை 9:00 மணிக்கு கோபூஜை,லட்சுமி பூஜை,இரண்டாம்கால யாகபூஜை, பூர்ணாஹூதி,கலச புறப்பாடுக்கு பிறகு சிவாச்சாரியார்கள் தலைமையில் கும்பநீர் ஊற்றப்பட்டது.பின்பு சப்த கன்னிமார், செல்வ விநாயகர், கருப்பணசாமி,முருகன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு பால்,சந்தனம், மஞ்சள் உட்பட பொருட்களால் அபிஷேகம்,தீபாரதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் முதுகுளத்தூர் சுற்றியுள்ள பகுதியிலிருந்து பலரும் கலந்து கொண்டனர்.