Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாப்பம்பட்டி மாகாளியம்மன் கோவில் ...  விருதுநகர் வெயிலுகந்தம்மன் கோயிலில் வைகாசி பொங்கல் கொடியேற்றம்  விருதுநகர் வெயிலுகந்தம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடபழனி ஆண்டவர் கோவிலில் வைகாசி பிரமோற்சவ பெருவிழா நாளை கொடியேற்றம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வடபழனி ஆண்டவர் கோவிலில் வைகாசி பிரமோற்சவ பெருவிழா நாளை கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

20 மே
2026
06:05

சென்னை; வடபழனி ஆண்டவர் கோவிலில் வைகாசி பிரமோற்சவ பெருவிழா நாளை காலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

சென்னை, வடபழனியில் அமைந்துள்ளது ஆண்டவர் கோவில். முருகன் கோவில்களில் தொன்மையான தென்பழனிக்கு நிகராக, இக்கோவில் புகழ்பெற்று விளங்குகிறது. இக்கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு, 10 நாட்கள் பிரம்மோற்சவம் விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு, இன்று மாலை மூஷிக வாகன புறப்பாடு நடைபெற்றது. பிரம்மோற்சவத்தின் முதல் நாளான நாளை காலை 7.35 மணிக்குமேல்  9 மணிக்குள்  துவஜா ரோஹணம் எனும் கொடியேற்ற வைபவம் நடக்கிறது. அதைத்தொடர்ந்து, தினமும் காலை 7:00 மணிக்கு, மங்களகிரி விமான புறப்பாடு நடக்கிறது. நாளை இரவு மங்களகிரி விமானத்தில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் வீதி உலா நடக்கிறது. விழாவின் இரண்டாம் நாள் காலை சூரிய பிரபை புறப்பாடு, இரவு சந்திர பிரபை புறப்பாடும் நடக்கிறது. 


பிரம்மோற்சவத்தின் பிரதான நாளான, 27ம் தேதி காலை தேர் திருவிழா நடக்கிறது. காலை 7.05 மணி முதல் 7:25 மணிக்குள் தேர் பக்தர்களால் வடம் பிடிக்கப்படுகிறது. இரவு ஒய்யாளி உற்சவம் நடக்கிறது. வைகாசி விசாகமான, 30ம் தேதி காலை வள்ளி தேவசேனா சமேத சண்முகர் வீதியுலா நடக்கிறது. காலை 9 மணிக்கு மேல் தீர்த்தவாரி உற்சவமும், கலசாபிஷேகமும் நடக்கிறது. மாலை 7 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், மயில் வாகனத்தில் புறப்பாடு நடக்கிறது. பின், சுப்பிரமணியர் வீதி உலாவை அடுத்து, துவஜ அவரோஹணம் எனும் கொடியிறக்கத்துடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது. வரும், 31ம் தேதி இரவு விசேஷ புஷ்ப பல்லக்கு புறப்பாடு, சுப்பிரமணியர் வீதி உலா நடக்கிறது. விழாவில் தினமும் மாலை பரதநாட்டியம், சொற்பொழிவு, இன்னிசை கச்சேரி, வீணை கச்சேரி, இசை சொற்பொழிவு ஆகியவை நடக்கின்றன.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவராத்திரி ஐந்தாம் நாளில் (பஞ்சமி திதி) அம்பிகையை மோகினி (வைஷ்ணவி) அலங்காரத்தில் வழிபடுவது ... மேலும்
 
temple news
திருமலை, திருமலை திருப்பதியில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் நவராத்திரி ... மேலும்
 
temple news
கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் கோலாகலமாகத் தொடங்கியுள்ளன. பஞ்சமி நாளை ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி சக்தி கொலுவின் நான்காம் நாளான நேற்று, அபிராமி ... மேலும்
 
temple news
மைசூரு: மைசூரு தசரா விழாவின் நிறைவு நிகழ்ச்சியான ஜம்பு சவாரியில், இந்த ஆண்டு 750 கிலோ எடையுள்ள தங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar