Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாடக் கோட்டை முனீஸ்வரர் கோயில் விழா: ... பாடலாத்ரி  நரசிம்ம பெருமாள் கோவிலில் கருடசேவை விமரிசை பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் தமிழக கால்நடைத்துறை அமைச்சர் கமலி சுவாமி தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் தமிழக கால்நடைத்துறை அமைச்சர் கமலி சுவாமி தரிசனம்

பதிவு செய்த நாள்

23 மே
2026
02:05

அவிநாசி: ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் தமிழகத்தின் கால்நடைத்துறை அமைச்சராக புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக எம்.எல்.ஏ., கமலி சுவாமி தரிசனம் செய்தார்.


தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அவிநாசி சட்டமன்ற தனி தொகுதியில் நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த த வெக வேட்பாளர் கமலி எம்எல்ஏவாக வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து தமிழக சட்டசபை விரிவாக்கத்தில் கால்நடை துறை அமைச்சராக பொறுப்பு வழங்கப்பட்டது. கால்நடைத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின் தனது சொந்த தொகுதிக்கு வந்த அமைச்சர் கமலி இன்று அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.  முன்னதாக கோவில் தீபஸ்தம்பம் அருகே உள்ள வீரபத்திரர் சன்னதி முன்பு எள் மற்றும் நெய் தீபம் ஆகியவற்றை ஏற்றினார். அதனைத் தொடர்ந்து கோவில் சிவாச்சாரியார்கள் பூர்ண கும்ப மரியாதை வழங்கி மாலை அணிவித்தனர். பின்னர் கோவில் செயல் அலுவலர் சபரீஷ் குமார் அமைச்சர் கமலிக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனையடுத்து, மூலவர்,அம்மன், சுப்ரமணியர் மற்றும் நடராஜர் ஆகிய சன்னதிகளில் தரிசனம் செய்தார். அமைச்சர் கமலிக்கு கோவில் சிவாச்சாரியார்கள் சார்பில் நினைவு பரிசாக சுவாமி அம்பாள் கூடிய புகைப்படம் அளித்தனர். பின்னர் அவிநாசி சேவூர் ரோட்டில் உள்ள சட்டமன்ற அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோரை சந்தித்து வாழ்த்துக்கள் பெற்றார். இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளர் சங்கர், பல்லடம் எம்எல்ஏ ராம்குமார், ஒன்றிய செயலாளர் ஆனந்த், ஷாபி, ராமசாமி, சுரேஷ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழாவின் நான்காம் நாள் விழாவில் அம்மன் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: லட்சுமி நரசிம்மர் கோவில் நவராத்திரி உற்சவத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.விழுப்புரம் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: செம்பாக்கம் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி அம்மன் கோவிலில் வாராகி நவராத்திரி விழாவையொட்டி, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar