Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருச்சிகம் : குருப்பெயர்ச்சி பலன் ... மகரம் : குருப்பெயர்ச்சி பலன் 2026- 2027 மகரம் : குருப்பெயர்ச்சி பலன் 2026- 2027
முதல் பக்கம் » குரு பெயர்ச்சி பலன்கள் (26.5.2026 முதல் 12.6.2027 வரை)
தனுசு : குருப்பெயர்ச்சி பலன் 2026- 2027
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தனுசு : குருப்பெயர்ச்சி பலன் 2026- 2027

பதிவு செய்த நாள்

25 மே
2026
06:05

தனுசு: 

மூலம்: எச்சரிக்கை அவசியம்

ஞானமோட்சக்காரகன் கேது, மங்களக்காரகன் குரு அம்சத்தில் பிறந்த நீங்கள், நல்லது கெட்டது பாவ புண்ணியம் என்பதை எல்லாம் அறிந்தவர்கள். பிறருக்கு வழிகாட்டியாக வாழ்பவர்கள். நினைத்ததை அடையும் நிலையும், சாதிக்கும் சக்தியும் இயல்பாகவே உங்களுக்கு இருக்கும். அத்தகைய வலிமை கொண்ட உங்களுக்கு, மே 26 முதல் குரு அஷ்டம ஸ்தானத்தில் உச்சமாக சஞ்சரித்தும், அக். 20 முதல் பாக்ய ஸ்தானத்தில் அதிசாரமாக சஞ்சரித்தும் பலன்களை வழங்கிட இருக்கிறார்.

உங்கள் ராசிநாதனான குரு அஷ்டம ஸ்தானமான 8 ம் இடத்தில் மறையும் காலம் என்பது உங்கள் கண்களைக்கட்டி காட்டில் விட்டது போன்ற காலமாகும். இக்காலத்தில் திட்டமிடாமல் சில வேலைகளில் இறங்கி அதனால் அவதிக்கு ஆளாவீர்கள். உங்கள் செல்வாக்கும் அந்தஸ்தும் கேள்விக்குறியாகும். எதிர்பார்ப்புகள் இழுபறியாகும். குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை ஏற்படும். வரவு செலவில் எதிர்பாராத நெருக்கடி உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் பிரச்னைகள் தேடிவரும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும்.  அந்நிய நபர்களால் குடும்பத்திற்குள் குழப்பம் உண்டாகும். உடல்நிலையில் எதிர்பாராத சங்கடங்கள் தோன்றும். அக். 20 முதல் உங்கள் ராசிக்கு பாக்ய ஸ்தானமான சிம்ம ராசிக்குள் அதிசாரமாக சஞ்சரிக்கும் குரு, இருட்டில் இருந்த உங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருவார். உடல் நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். மனதில் தைரியத்தை அதிகரிப்பார். தன்னம்பிக்கையை உண்டாக்குவார். செல்வாக்கு, அந்தஸ்து, பட்டம், பதவி என்ற கனவுகளை நனவாக்குவார். பொன் பொருள் சேர்க்கையை உண்டாக்குவார். வீடு மனை வாகனம் என வசதி வாய்ப்புகளை அதிகரிப்பார். குடும்பத்தில் இருந்த நெருக்கடிகளை விலக்குவார். தடைபட்ட வேலைகளை நடத்தி வைப்பார். வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றத்தையும், செய்துவரும் தொழிலில் லாபத்தையும் வழங்குவார். எடுக்கும் வேலைகளை வெற்றியாக்குவார். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றத்தை வழங்குவார். உயர்கல்வி, திருமணம் என்ற கனவுகளை நனவாக்குவார் என்பதெல்லாம் பொது விதியாகும்.

உங்கள் ராசியாதிபதியே குரு என்பதால் எந்த நிலையிலும் உங்கள் கௌரவம் செல்வாக்கு அந்தஸ்திற்கு குறைவு ஏற்படாது என்பதுடன் அவர் சஞ்சரிக்கும் பூசம், மகம் நட்சத்திரங்கள் தாரா பலன்படி ஸேமம், ஸாதக தாரைகள் என்பதால் பூசம், மகம் நட்சத்திரங்களில் சஞ்சரிக்கும் காலங்களில் உங்களுக்கு நன்மைகளை அதிகரிப்பார்.

சஞ்சாரம் மற்றும் பார்வை பலன்

குரு பார்க்கும் இடங்கள் சிறப்படையும் என்பது விதி. மே 26 முதல் குரு அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும், அவருடைய பார்வைகள் 12, 2, 4 ம் இடங்களுக்கு கிடைப்பதால் வீண்செலவுகள் குறையும். அலைச்சல் கட்டுப்படும். மனதில் நிம்மதி உண்டாவதுடன் குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். கையில் பணம் புரளும், தடைபட்ட வேலைகள் நடந்தேறும். சிலருக்கு புதிய சொத்து, வாகனம் சேரும். அர்த்தாஷ்டம சனியால் ஏற்பட்ட பாதிப்பு விலகும். ஆரோக்கியம் சீராகும். அக். 20 முதல் அதிசாரமாக சிம்மத்தில் சஞ்சரிக்கும் குரு, உங்கள் ராசியையும், 3,5 ம் இடங்களையும் பார்ப்பதால் உங்கள் நிலை உயரும். மற்றவர்கள் ஆச்சரியப்படும் வகையில் உங்களுடைய வளர்ச்சி இருக்கும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும் உயர்கல்வி, வேலை, திருமணம், குழந்தை பாக்யம் என்ற கனவுகள் நனவாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். செய்துவரும் தொழில் வளர்ச்சி அடையும். 

அஸ்தமனம் மற்றும் வக்ர காலங்கள்

ஜூலை 10 முதல் ஆக. 9 வரை கடக ராசியில் குரு அஸ்தமனம் அடைவதால் அவரால் உண்டாகும் பலன்களில் தடையுண்டாகும். டிச. 22 முதல் 2027, பிப். 13 வரை சிம்மத்திலும், அதன்பிறகு ஏப். 20 வரை கடகத்திலும் வக்ர கதியிலேயே சஞ்சரிப்பதால் மேலே உள்ள பலன்கள் மாறுபடும். 

பொதுப்பலன்

அக். 20 வரை குரு அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும், அவருடைய பார்வைகள் உங்களைப் பாதுகாக்கும். நவ. 13 வரை சகாய ஸ்தான ராகு உங்களை தைரியத்துடன் செயல்பட வைப்பார். அக். 20 முதல் பாக்ய குருவும் அவருடைய பார்வைகளும் உங்கள் வாழ்வை வளமாக்கும்.

தொழில்

செய்துவரும் தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும் விற்பனையில் இருந்த மந்தநிலை மாறும். உங்கள் முயற்சிக்கு பணியாளர்களுடைய ஆதரவு உண்டாகும். சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். மருத்துவம் சார்ந்த தொழில்கள், ஆன்மீகம் சார்ந்த பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை, நிதி நிறுவனம், காண்ட்ராக்ட், எக்ஸ்போர்ட், ஜூவல்லரி, பங்கு வர்த்தகம், ஆன்லைன் பிசினஸ், கம்ப்யூட்டர், ஐ.டி. தொழில்கள் வளர்ச்சி அடையும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். அக். 20 முதல் முடங்கிய தொழில்கள் முன்னேற்றம் அடையும்.

பணியாளர்கள் 

மே 26 முதல் அஷ்டம குருவால் பார்த்துவரும் வேலையில் எதிர்பாராத சங்கடங்கள் பிரச்னைகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும் என்றாலும், சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு உங்களைப் பாதுகாப்பார். தைரியமுடன் செயல்பட வைப்பார். அக். 20 முதல் பாக்ய குருவால் வேலையில் உங்களுக்கிருந்த பயம் போகும். உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் இல்லை திறமைக்கேற்ற பதவி இல்லை என வருந்திய நிலை மாறும். எதிர்பார்த்த பொறுப்பும் சலுகைகளும் கிடைக்கும். அரசு பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு தேடிவரும்.

பெண்கள்

அக். 20 வரை மாங்கல்ய ஸ்தானமான எட்டாம் இடத்தில் குரு சஞ்சரித்தாலும், அவருடைய பார்வைகள், அயன சயனம் மற்றும் குடும்பம், சுக ஸ்தானங்களுக்கு உண்டாவதால் மனதில் நிம்மதி இருக்கும். தாம்பத்தியம் சிறக்கும். பிறந்த இடத்திலும் புகுந்த வீட்டிலும் நிம்மதி இருக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். தாய்வழி உறவினர்களின் ஆதரவு ஏற்படும். அக். 20 முதல் பாக்ய குருவால் உயர்கல்வி, வேலை என்ற கனவு நனவாகும். திருமண வயதினருக்கு கழுத்தில் மாங்கல்யம் ஏறும். பொன் பொருள் சேரும்.

கல்வி 

மே 26 முதல் குரு அஷ்டம ஸ்தானத்தில் மறைவதால்  உயர்கல்விக்காக அதிகபட்ச முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியதாக இருக்கும். சிலருக்கு விரும்பிய கல்லூரியும் விருப்பப்பட்ட பாடப்பிரிவும் கிடைக்காமல் போகலாம் என்றாலும் உயர் கல்விக்காக எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.

உடல்நிலை 

அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு ஆரோக்கியத்தில் சங்கடங்களை ஏற்படுத்தலாம், பரம்பரை நோய், பருவ நோய், தொற்று நோயென சிலருக்கு பாதிப்பு ஏற்படும். வாகனப் பயணத்தில் சங்கடங்களுக்கு ஆளாக நேரும் என்றாலும் அக். 20 முதல் பாக்ய குருவின் பார்வை ராசிக்கு உண்டாவதால் வந்த நோயெல்லாம் வந்தவழித் தெரியாமல் போகும். உடல் நிலை சீராகும். ஆரோக்கியம் மேம்படும்.

குடும்பம்

நவ. 13 வரை சகாய ராகு, அக். 20 முதல் பாக்ய குருவால் குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் விலகும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். புதிய இடம் வீடு வாகனம் என்ற கனவு நனவாகும். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். தம்பதிக்குள் ஒற்றுமை ஏற்படும். பொன் பொருள் சேரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடந்தேறும். சமூகத்தில் உங்களுக்கென்று தனி அந்தஸ்து உண்டாகும்.

பரிகாரம் 

கற்பக விநாயகரை வழிபட நன்மைகள் நடக்கும். எடுக்கும் வேலைகள் வெற்றியாகும்.

பூராடம்: நிதானம் அவசியம்

அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன், தனக்காரகன் குரு அம்சத்தில் பிறந்த நீங்கள் திட்டமிட்டு எந்த ஒன்றிலும் செயல்படக் கூடியவர்கள். எது சாதகமாக இருக்கும்? எது பாதகமாக இருக்கும்? என்பதை அறிந்து சாதகமான வழியில் செல்லக்கூடியவர்கள். வெளியில் கண்டிப்பானவர்போல் தெரிந்தாலும் மனதளவில் குழந்தையான உங்களுக்கு,
இதுவரை சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து யோகப்பலன்களை வழங்கிவந்த உங்கள் ராசிநாதன் குரு, மே 26 முதல் குரு அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கப் போகிறார். அங்கிருந்து அக். 20 முதல் அதிசாரமாக பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரித்து பலன்களை வழங்கிட உள்ளார்.

விவேகம், வித்தை, அந்தஸ்து என்பதையெல்லாம் வழங்கிடக்கூடிய குரு அஷ்டம ஸ்தானமான 8 ம் இடத்தில் மறையும் காலம் என்பது உங்கள் முன்னேற்றத்திற்கு தடையான காலமாக இருக்கும். இக்காலத்தில் இதுவரை உங்களுக்குக் கிடைத்துவந்த நற்பலன்களில் மாற்றம் ஏற்படும். வியாபாரம் மற்றும் தொழில் மந்தமடையும். உங்களிடம் எப்போதும் இருக்கும் சமயோசித புத்தி  மட்டுப்படும். நம்பக்கூடாதவர்களை நம்பி சங்கடத்திற்கு ஆளாவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எப்போதோ செய்த தவறுக்கு இப்போது மெமோ வரும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். உடல்நிலையிலும் ஏதேனும் ஒரு சங்கடம் இருந்து கொண்டிருக்கும். கணவன் மனைவியும் வடதுருவம் தென்துருவமாக மாறி நிற்கக்கூடிய நிலை உருவாகும். அந்நியர்களால் குடும்ப நிம்மதி கெடும். வரவு செலவில் எதிர்பாராத நெருக்கடி ஏற்படும். எடுத்த வேலைகளை நடத்த முடியாமல் போகும். உங்களுக்குள்ளாகவே ஒரு தாழ்வு மனப்பான்மை ஏற்படும். இவையெல்லாம் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு வழங்கும் பொதுப்பலன்களாகும். அக். 20 முதல் அஷ்டம ஸ்தானத்தை விட்டு அதிசாரமாக உங்கள் ராசிக்கு பாக்ய ஸ்தானமான சிம்ம ராசிக்குள் சஞ்சரிக்கிறார் குரு. நம்முடைய வாழ்க்கை வளமடைவதற்கும், சோதனைக்கு ஆளாவதற்கும் கிரகங்களே காரணம் என்ற உண்மையை இப்போது நீங்கள் உணர்வீர்கள். இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு வந்ததுபோல் உங்கள் நிலை மாறும். உங்களை ஏளனமாகப் பார்த்தவர்களும் ஆச்சரியமாக பார்த்திடக்கூடிய அளவிற்கு உங்கள் நிலை உயரும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். செய்து வரும் தொழில் முன்னேற்றமடையும். வேலையில் எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும். சிலருக்கு குழந்தை பாக்யம் ஏற்படும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகி மகிழ்ச்சி அதிகரிக்கும். விஐபிகள் ஆதரவால் எடுக்கும் வேலைகள் வெற்றியாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். உயர்கல்வி முயற்சி வெற்றியாகும். சிலருக்கு திருமணம் நடந்தேறும். பொன் பொருள் சேரும். வீடு வாகனம் என்ற கனவு நனவாகும் என்பதெல்லாம் பாக்ய ஸ்தான குரு வழங்கும் பொதுப்பலன்களாகும்.
உங்கள் ராசியாதிபதி குரு என்பதால் உங்களுக்குள் சரியான புரிதலும் தெளிவும் இருக்கும். அந்தஸ்தும் செல்வாக்கும் இருக்கும் என்பதுடன் அவர் சஞ்சரிக்கும் பூசம், ஆயில்யம்,மகம் நட்சத்திரங்கள் தாரா பலன்படி ஸாதகம், நட்பு, அதிநட்பு தாரைகள் என்பதால் பூசம், ஆயில்யம், மகம் நட்சத்திரங்களில் சஞ்சரிக்கும் காலங்களில் உங்கள் முயற்சிகளை வெற்றியாக்குவார். நீங்கள் நினைத்ததை நடத்தி வைப்பார்.

சஞ்சாரம் மற்றும் பார்வை பலன்

குரு சஞ்சாரம் பாதகமாக இருந்தாலும் அவர் பார்க்கும் இடங்கள் சிறப்படையும் என்பது விதி. மே 26 முதல் குரு அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் நிலையில் அவருடைய பார்வைகள் விரயம், தன, குடும்பம், சுக ஸ்தானங்களுக்கு உண்டாவதால் வீண்செலவுகள் குறையும். தொழில் வளர்ச்சி அடையும். வேலையில் ஏற்பட்ட தொல்லை விலகும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகி சுபிட்சமான நிலை இருக்கும். கையில் பணம் புரளும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வேலைக்காக மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வு ஏற்படும்.  தடைபட்ட வேலைகள் நடந்தேறும். சிலருக்கு புதிய சொத்து, வாகனம் சேரும். அர்த்தாஷ்டம சனியால் ஏற்பட்ட பாதிப்பு விலகும். ஆரோக்கியம் சீராகும். திடீர் பண வரவு இருக்கும். அக். 20 முதல் அதிசாரமாக சிம்மத்தில் சஞ்சரிக்கும் குரு, உங்கள் ராசியையும், சகாயம் மற்றும் பூர்வ புண்ணிய ஸ்தானங்களையும் பார்ப்பதால், செல்வாக்கு உயரும். புத்திசாலித்தனம் வெளிப்படும். தொழில் வளர்ச்சி அடையும். வாழ்க்கை வளமாகும். பணப்புழக்கம் இருக்கும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும் உயர்கல்வி, வேலை, திருமணம், குழந்தை பாக்யம் என்ற கனவுகள் நனவாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி, பொறுப்பு கிடைக்கும்.

அஸ்தமனம் மற்றும் வக்ர காலங்கள்

ஜூலை 10 முதல் ஆக. 9 வரை கடக ராசியில் குரு அஸ்தமனம் அடைவதால் அவரால் உண்டாகும் பலன்களில் தடையுண்டாகும். டிச. 22 முதல் 2027, பிப். 13 வரை சிம்மத்திலும், அதன்பிறகு ஏப். 20 வரை கடகத்திலும் வக்ர கதியிலேயே சஞ்சரிப்பதால் மேலே உள்ள பலன்கள் மாறுபடும். 

பொதுப்பலன்

அஷ்டம குருவின் பார்வைகள், சகாய ஸ்தான ராகு, அக். 20 முதல் பாக்ய குருவும் அவருடைய பார்வைகளும் உங்கள் முயற்சிகளை வெற்றியாக்கும். வீடு, வாகனம், ஆடை, ஆபரணம் என்ற கனவை நனவாக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரிக்கும். தொழிலில் முன்னேற்றத்தில் உத்தியோகத்தில் உயர்வையும் உண்டாக்கும். செல்வம், செல்வாக்கை அதிகரிக்கும்.

தொழில்
 
தொழில்மீது அக்கறை அதிகரிக்கும். கடந்தகால அனுபவங்களைக் கொண்டு திட்டமிட்டு செயல்படத் தொடங்குவீர்கள். விற்பனையும் வரவும் அதிகரிக்கும். பணியாளர் ஒத்துழைப்பு கிடைக்கும். சினிமா, தொலைக்காட்சி, வலைதளம், ஏ.ஐ., ஆன்லைன் வர்த்தகம், உணவகம், விடுதி, திருமண மண்டபம், ட்ராவல் ஏஜென்சி, ஆடை வணிகம், கால்நடை வளர்ப்பு, அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை, நிதி நிறுவனம், ஜூவல்லரி, வாகனம் தயாரிப்பு மற்றும் வாகனம் சம்பந்தப்பட்ட தொழில்கள் லாபம்தரும்.

பணியாளர்கள்

வேலைப் பார்க்கும் இடத்தில் வேலை பளு அதிகரித்தாலும், அதற்கேற்ற ஆதாயம் கிடைக்கும். உங்கள் திறமைக்குரிய மதிப்புண்டாகும். எதிர்பார்த்த சலுகையும் ஊதியமும் கிடைக்கும். சிலர், பார்க்கும் வேலையை விட்டு விட்டு வேறு வேலைக்குச் செல்வீர். அரசு உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் ஏற்படும். தற்காலிகப் பணியாளர்களுக்கு வேலை நிரந்தரமாகும்.

பெண்கள்

குருப்பார்வைகள் சாதகமாக இருப்பதால், படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்யம் என அவரவரின் கனவு நனவாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை இருக்கும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். தம்பதிகளுக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். பொன் பொருள் சேரும். வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும்.

கல்வி

படிப்பின் மீது அக்கறை கூடும். பொதுத்தேர்வு, போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உயர்கல்வி கனவு நனவாகும். மேற்கல்விக்காக சிலர் வெளி மாநிலம் வெளிநாடு என்றும் செல்வீர்கள்.

உடல்நிலை 

பரம்பரை நோய், தொற்று நோய், பருவ நோய், விபத்து என்று ஆரோக்கியத்தில் சங்கடங்கள் ஏற்பட்டாலும் அவையெல்லாம் சிகிச்சையால் சீராகும். மருத்துவச்செலவு 
குறையும். ஆரோக்கியம் மேம்படும்.

குடும்பம்
 
குடும்பத்தில் இருந்த குழப்பம், பிரச்னை விலகும். தம்பதிக்குள் ஒற்றுமை உண்டாகும். சொந்த வீடு வாகனம் என்ற கனவு சிலருக்கு நனவாகும்.  பொன் பொருள் சேரும். பிள்ளைகளின் உயர் கல்வி, திருமணம் என்ற ஆசைகள் பூர்த்தியாகும். பொருளாதார நிலை உயரும். உறவினர்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும்.

பரிகாரம் 

அங்காள பரமேஸ்வரியை வழிபட சங்கடங்கள் விலகும். நன்மைகள் நடக்கும். 

உத்திராடம் 1:  விருப்பம் நிறைவேறும்
––––––
ஆத்ம காரகனான சூரியனை நட்சத்திர அதிபதியாக கொண்டிருந்தாலும், 1ம் பாதமான தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு, குரு ராசிநாதனாகவும், 2,3,4 ம் பாதங்களான மகரத்தில்  பிறந்தவர்களுக்கு சனி ராசிநாதனாகவும் உள்ளனர்.

உத்திராடம் 1 ம் பாதத்தினருக்கு மே 26 முதல் அஷ்டம ஸ்தானத்திலும், அக். 20 முதல் பாக்ய ஸ்தானத்திலும் சஞ்சரித்து குரு பலன்களை வழங்கிட உள்ளதால், மே 26 முதல், எதிர்பாராத நெருக்கடிகளும், வேலை மற்றும் தொழிலில் போராட்ட நிலையும், தேவையற்ற பிரச்னைகளும் உருவெடுக்கும். குடும்பத்திலும் நிம்மதியற்ற நிலை இருக்கும். சிலருக்கு பண நெருக்கடி, உடலில் சங்கடம்,  எதை எடுத்தாலும் கைகூடி வராத நிலை என்று சங்கடங்களை சந்திக்க வேண்டியதாக இருக்கும் என்றாலும், இந்த நிலை யாவும் அக். 20 முதல் அப்படியே மாறும். கடலில் தத்தளித்து வந்தவர் கரைக்கு வந்ததுபோல் வாழ்க்கையில் ஏற்பட்ட பயம் போகும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். நினைத்த காரியங்கள் நடந்தேறும். வியாபாரம் தொழில் முன்னேற்றமடையும். பொருளாதார நிலை உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர்வும், பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு செல்வாக்கும் ஏற்படும். சிலருக்கு சொந்த வீடு வாகனம் என்ற கனவு நனவாகும். 
உத்திராடம் 2,3,4 ம் பாதத்தினருக்கு மே 26 முதல் சப்தம ஸ்தானமான 7 ம் இடத்திலும், அக். 20 முதல் அஷ்டம ஸ்தானமான 8 ம் வீட்டிலும் குரு சஞ்சரிப்பதால், மே 26 முதல் சப்தம குருவால் செல்வாக்கு உயரும். வாழ்க்கையில் இருந்த போராட்ட நிலை மாறும். உடல்நிலை சீராகும். நீண்டநாள் கனவுகள் நனவாகும், பட்டம், பதவி, அந்தஸ்து, செல்வாக்கு, சொத்து, சுகம் எல்லாம் தேடிவரும். பொன் பொருள் சேரும், குடும்பத்திலும் வேலையிலும் நிம்மதியான நிலை ஏற்படும். திருமண வயதினருக்கு வரன் வரும். அக். 20 முதல் அஷ்டம குருவால் வியாபாரம் தொழிலில் மந்தநிலை உண்டாகும். வருமானம் தடைபடும். கடன் தொல்லையால் குழப்பம் அதிகரிக்கும். யோசிக்காமல் சில வேலைகளில் இறங்கி சங்கடங்களை சந்திக்க வேண்டியதாக இருக்கும். கணவன் மனைவிக்குள்ளும் ஒற்றுமை இல்லாமல் போகும். தவறான நட்புகளால் உங்களுக்கிருந்த செல்வாக்கு விமர்சனத்திற்கு ஆளாகும். சிலருக்கு உடல்நிலையில் எதிர்பாராத பாதிப்பு ஏற்படும். வேலையில் நெருக்கடி அதிகரிக்கும்.

உங்கள் நட்சத்திராதிபதி சூரியன் குருவிற்கு நட்பானவர் என்பதால், உங்களுக்கு வரும் சங்கடங்கள் எல்லாம் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனதுபோல் போகும் என்பதுடன், அவர் சஞ்சரிக்கும் பூசம், மகம் நட்சத்திரங்கள் தாரா பலன்படி ஸாதகம் மற்றும் நட்பு தாரைகள் என்பதால் பூசம், மகம் நட்சத்திரங்களில் சஞ்சரிக்கும் காலத்தில் நன்மைகள் கூடும்.

சஞ்சாரம் மற்றும் பார்வை பலன்

மங்களக்காரகன் குருவின் சஞ்சார நிலை பாதகமாக இருக்கும் காலத்திலும் அவருடைய பார்வைகளுக்கு ஆளாகும் ஸ்தானங்கள் சுபிட்சமடையும்.
உத்திராடம் 1 ம் பாதத்தினருக்கு மே 26 முதல் 12,2,4 ம் இடங்களைக் குரு பார்ப்பதால், வீண் அலைச்சலும் விரய செலவுகளும் குறையும். நஷ்டம் கஷ்டம் என்ற நிலைகள் மாறும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். வருமானம் உயரும். பழைய கடன்கள் அடைபடும். செல்வாக்கு ஏற்படும். பணம் பல வழியிலும் வர ஆரம்பிக்கும். வாழ்க்கைத் துணையுடன் இணக்கம் உண்டாகும். தாயாரின் உடல்நிலையில் முன்னேற்றம் உண்டாகும். கல்வியில் மேன்மை ஏற்படும். புதிய வீடு, வாகனம் என்ற எண்ணம் நிறைவேறும். ஆரோக்கியம் சீராகும்.
அக். 20 முதல் ஜென்ம ராசியையும் 3,5 ம் இடங்களையும் குரு பார்ப்பதால், செல்வாக்கு உயரும். தடைபட்ட வேலைகள் முடிவிற்கு வரும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். தொழில் முன்னேற்றமடையும். பணியாளர் நிலை உயரும். பணம், புகழ், செல்வாக்கு அதிகரிக்கும். நினைத்ததை நடத்திக் கொள்ள முடியும்.  சிலருக்கு குழந்தை பாக்யம் ஏற்படும். திருமண வயதினருக்கு வரன் வரும். உயர் கல்வி கனவு நனவாகும். உத்திராடம் 2,3,4 ம் பாதத்தினருக்கு, மே 26 முதல் ஜென்ம ராசியையும், லாபம் மற்றும் சகாய ஸ்தானங்களையும் குரு பார்ப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். நஷ்டத்தில் இயங்கிய தொழில்களும் லாபம்தரும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும்.
செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். பட்டம் பதவி தேடிவரும்.  நினைத்த காரியங்கள் நடந்தேறும்.
எடுத்த வேலைகள் வெற்றியாகும். உடல்நிலை சீராகும். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். அக். 20 முதல் 12,2,4 ம் இடங்களுக்கு குருப்பார்வை உண்டாவதால், சேமிப்பில் கவனம் செல்லும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். கையில் பணம் புரளும். புதிய வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும்.

அஸ்தமனம் மற்றும் வக்ர காலங்கள்

ஜூலை 10 முதல் ஆக. 9 வரை கடக ராசியில் குரு அஸ்தமனம் அடைவதால் அவரால் உண்டாகும் பலன்களில் தடையுண்டாகும். டிச. 22 முதல் 2027, பிப். 13 வரை சிம்மத்திலும், அதன்பிறகு ஏப். 20 வரை கடகத்திலும் வக்ர கதியிலேயே சஞ்சரிப்பதால் மேலே உள்ள பலன்கள் மாறுபடும். 

பொதுப்பலன்

உத்திராடம் 1 ம் பாதத்தினருக்கு சகாய ஸ்தான ராகுவும், அக். 20 முதல் பாக்ய குருவும், 2,3,4 ம் பாதத்தினருக்கு சகாய சனியும், மே 26 முதல் குருவும், தொடர்ந்து குருவின் பார்வைகளும் நன்மைகளை வழங்கும். நினைத்த காரியங்கள் நடந்தேறும். குடும்பம், வியாபாரம், தொழில், உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். பொன் பொருள் சேரும். புகழுடன் வாழும் நிலை உருவாகும்.

தொழில்

எந்த இடத்திலும் முதன்மையாக இருந்திடக் கூடிய நீங்கள், செய்து வரும் தொழிலிலும் முதல் இடத்தில் இருப்பீர்கள். நிதி நிறுவனம், உதிரி பாகங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை, இயந்திரத் தொழிற்கூடம், வாகன விற்பனை, எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், தகவல் தொடர்பு, ஏ.ஐ., ஏற்றுமதி இறக்குமதி, ஆன்லைன் வர்த்தகம், ஜுவல்லரி, சின்னத்திரை, வலைதளம், பதிப்பகம், ஷேர் மார்க்கெட், அழகு சாதனம், கவரிங், பேன்சி ஸ்டோர் தொழில்கள் லாபம்தரும்.

பணியாளர்கள் 

பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உங்கள் திறமைக்குரிய மரியாதை உண்டாகும். நீண்ட நாளாக எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். புதிய பொறுப்புகள் கைக்கு வரும். அரசு ஊழியர்களுக்கு  வேலையில் ஏற்பட்ட வழக்கு முடிவடையும். எதிர்பார்த்த பதவி உயர்வு இடமாற்றம் கிடைக்கும்.

பெண்கள்

குருப்பார்வைகள் சாதகமாக இருப்பதால் வாழ்க்கையில் நிம்மதியான நிலை உண்டாகும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு ஏற்படும். திருமண வயதினருக்கு மாங்கல்யம் ஏறும். சிலருக்கு குழந்தைப்பேறு கிடைக்கும். கணவருடன் ஏற்பட்ட இடைவெளி விலகும். பொன் பொருள் சேரும். சுய தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வேலைப் பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்குவரும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும்.

கல்வி 

ஆத்ம காரகனின் அம்சமான உங்களுக்கு படிப்பில் அக்கறை இருக்கும். உயர் பதவி என்ற லட்சியத்துடன் படிப்பில் ஆர்வமாக இருப்பீர்கள். பொது மற்றும் போட்டித்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உயர் கல்வி கனவு நனவாகும்.

உடல்நிலை

உடல் நிலையில் தொடர்ந்து பாதிப்பு, மருத்துவமனை மருத்துவமனையாக ஏறி இறங்கியும் குணமடைய முடியவில்லையே என்று வேதனையோடு வாழ்ந்து வந்தவர்களுக்கு சரியான சிகிச்சைகள் கிடைத்து ஆரோக்யம் சீராகும்.

குடும்பம்

குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும் தம்பதிகளுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விலகும். இணக்கமான நிலை உண்டாகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். வீடு வாகனம் வாங்கும் முயற்சி வெற்றியாகும். பிள்ளைகளின் படிப்பு, திருமணம், எதிர்காலத்திற்கு தேவையான வசதிகள் என்று திட்டமிட்டு செயல்படுவீர்கள். சொந்த வீடு வாகனம் என்ற கனவு நனவாகும்.

பரிகாரம் 

ஆதி ஜெகந்நாதரை வழிபட நன்மைகள் நடந்தேறும். வேண்டுதல் பலிதமாகும்.

பகிர்க copied
 
மேலும் குரு பெயர்ச்சி பலன்கள் (26.5.2026 முதல் 12.6.2027 வரை) »
temple news
மேஷம்: அசுவினி: நல்லகாலம் வந்தாச்சுஇரத்தக் காரகனான செவ்வாய், ஞான மோட்சக்காரகனான கேது அம்சத்தில் ... மேலும்
 
temple news
ரிஷபம் கார்த்திகை 2,3,4: முயற்சி வெற்றியாகும்ஆத்ம காரகனான சூரியனை நட்சத்திர அதிபதியாக ... மேலும்
 
temple news
மிதுனம்: மிருகசீரிடம் 3,4: நல்லதே நடக்கும்தைரிய வீரிய காரகனான செவ்வாயை நட்சத்திர அதிபதியாக ... மேலும்
 
temple news
கடகம்புனர்பூசம் 4: நினைப்பது நடந்தேறும்ஞானக்காரகனான குரு பகவானை நட்சத்திர அதிபதியாக ... மேலும்
 
temple news
சிம்மம்: மகம்: விடாமுயற்சி வெற்றிதரும்ஞான மோட்சக் காரகனான கேது, ஆத்மக் காரகனான சூரியன் அம்சத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar