காஞ்சி மணிகண்டீஸ்வரர் கோவிலில் நற்பணி குழு துாய்மை பணி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25மே 2026 08:05
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மணிகண்டீஸ்வரர் கோவிலில், காஞ்சி நால்வர் நற்பணி குழுவினர் நேற்று துாய்மை பணி மேற்கொண்டனர்.
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த காஞ்சி நால்வர் நற்பணி குழுவினர் மாதந்தோறும் ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில், பராமரிப்பு இல்லாத சிவன் கோவில்களில் துாய்மை பணி மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, காஞ்சிபுரம் மணிகண்டீஸ்வரர் கோவிலில் நேற்று துாய்மை பணி மேற்கொண்டனர். இதில், கோவில் குளத்தில் வளர்ந்திருந்த செடிகளை அகற்றினர். கோவில் கோபுரங்களின் மீது படிந்திருந்த துாசுகளையும், பிற விக்ரஹங்களையும் சுத்தப்படுத்தினர். கோவிலில் உள்ள பூஜை பொருட்கள் மற்றும் சுவாமி அலங்கார பொருட்களையும் சுத்தப்படுத்தினர்.