Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் - ... தஞ்சை பெரியகோவில் கோட்டை அகழி துாய்மை பணி நிறுத்தம் தஞ்சை பெரியகோவில் கோட்டை அகழி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்தூர் முருகன் கோவிலில் அறநிலைத்துறை அமைச்சரிடம் விரைவு தரிசனம் செய்ய ரூ.4000 கேட்ட அர்ச்சகர்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருச்செந்தூர் முருகன் கோவிலில் அறநிலைத்துறை அமைச்சரிடம் விரைவு தரிசனம் செய்ய ரூ.4000 கேட்ட அர்ச்சகர்

பதிவு செய்த நாள்

29 மே
2026
10:05

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோவிலில் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் ரகசியமாக திடீர் ஆய்வு செய்தார். இதில் அமைச்சர் என்று தெரியாமல் விரைவாக தரிசனம் செய்ய ரூ.4000 அர்ச்சகர் பணம் கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


 தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலிலில் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் சாதாரண உடையில் முக கவசம் அணிந்து ரகசியமாக திடீர் ஆய்வு செய்தார். கோவில் வளாகம்,  அன்னதானம் கூடம், முடி காணிக்கை செலுத்தும் இடம், தரிசன வரிசை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் ஆய்வு செய்தார். பின்னர் பக்தருடன் சேர்ந்து அன்னதானம் சாப்பிட்டு அன்னதான உணவின் தரம் குறித்தும் பக்தர்களிடம் கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து தரிசன ஏற்பாடுகள் குறித்தும்,  நடைமுறைகள் குறித்தும் அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அன்னதான அலுவலகத்தில் பணியை சரிவர செய்யாத கோவில் பணியாளர்களிடம் மன்னிப்பு கடிதம் எழுத சொல்லி அமைச்சர் அதிரடி உத்தரவிட்டார். மேலும் தரிசன வரிசையில் முக கவசம் அணிந்து ரகசிய ஆய்வு செய்தபோது அமைச்சர் என்று தெரியாமல் அர்ச்சகர் ஒருவர் விரைவாக தரிசனம் செய்ய ரூபாய் 4000 கேட்டுள்ளார். அதற்கு அமைச்சர் கையில் பணம் இல்லை என்று சொல்லியதால் ஜிபேயில் அனுப்புங்கள் என்று அந்த அர்ச்சகர் கேட்டுள்ளார். அர்ச்சகர் தனது ஜிபே நம்பரை சொல்லி ரூ.4 ஆயிரம் பணத்தை பெற்றுக்கொண்டார்.


முறைகேடு செய்தவர்கள் மீது நடவடிக்கை; அமைச்சர் ரமேஷ் மற்றும் அவரது உதவியாளரிடம் ரூ.4 ஆயிரம் பெற்ற அர்ச்சகர், அவர்களின் உண்மையான அடையாளம் தெரிந்ததும் அதிர்ச்சி அடைந்தார். இதனை தொடர்ந்து முடி காணிக்கை செலுத்தும் இடம், அன்னதான கூடத்தில் அமைச்சர் ரமேஷ் ஆய்வு செய்தார். தற்போது முறைகேடு செய்தவர்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அமைச்சர் ரமேஷிடம் லஞ்சம் பெற்ற விவகாரத்தில் திருச்செந்துார் கோவில் பாதுகாவலர்கள் கருப்புசாமி, தோப்பு ஆகிய  2 பேர் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். அர்ச்சகர் ஐயப்பன் கோவிலில் பூஜை செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் முடி இறக்கும் தொழிலாளர்கள் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூர் சத்திய ஞான சபையில் இன்று நடந்த மாதந்திர ஜோதி தரிசனத்தை காண பக்தர்கள் ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar