Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சூலக்கல் மாரியம்மன் திருவிழா தேரில் ... அய்யாபட்டி காளியம்மன் கோவில் திருவிழாவில் பூஞ்சோலை செல்லும் நிகழ்ச்சி அய்யாபட்டி காளியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
 திருக்காமீஸ்வரர் கோவில் தேரோட்டம்: கவர்னர், முதல்வர் துவக்கி வைப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 திருக்காமீஸ்வரர் கோவில் தேரோட்டம்: கவர்னர், முதல்வர் துவக்கி வைப்பு

பதிவு செய்த நாள்

29 மே
2026
11:05

வில்லியனுார்: திருக்காமீஸ்வரர் கோவில் தேரோட்டத்தை கவர்னர் மற்றும் முதல்வர் வடம் பிடித்து துவக்கி வைத்தனர்.


வில்லியனுார் கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ தேர் திருவிழா கடந்த 20ம் தேதி துவங்கியது.வரும் ஜூன் 1ம் தேதி வரை நடைபெறும் விழாவில் தினமும் ஒவ்வொரு மரபினர் சார்பில், காலை சிறப்பு அபிேஷகம், இரவு சுவாமி வீதியுலா நடந்து வருகிறது. 23ம் தேதி இரவு பாரிவேட்டை நிகழ்ச்சி, 25ம் தேதி காலை 63 நாயன்மார்கள் வீதியுலா, இரவு வெள்ளி யானை, ரிஷபம், மயில் வாகனத்தில் சுவாமி வீதியுலா,27ம் தேதி இரவு திருக்கல்யாணம் உற்சவம் நடந்தது.முக்கிய விழாவாக நேற்று காலை 8:10 மணிக்கு மேல் தேரோட்டம் நடந்தது. கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம், எம்.எல்.ஏ.,க்கள் ரவிக்குமார், கார்த்திகேயன் ஆகியோர் வடம் பிடித்து துவக்கி வைத்தனர். 


மாட வீதிகள் வழியாக சென்ற தேர் காலை 11:30 மணியளவில் நிலையை அடைந்தது. பக்தர்களுக்கு அன்னதானம்,நீர் மோர், குளிர்பானங்கள் வழங்கப்பட்டது. ஐ.ஜி., தலைமையில்,சீனியர் எஸ்.பி., கலைவாணன், எஸ்.பி.,க்கள் பக்தவசலம், சுப்ரமணியன், இன்ஸ்பெக்டர்கள் கலைச்செல்வன் ஆகியோர் முன்னிலையில் நுாற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று (29ம் தேதி) மதியம் தீர்த்தவாரி, இரவு தெப்ப உற்சவம், 30ம் தேதி இரவு முத்துப்பல்லக்கு உற்சவம், 31ம் தேதி விடையாற்றி உற்சவம், ஜூன் 1ம் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி திருகாமீஸ்வரன், சிவனடியார்கள், சிவாச்சார்யர்கள் மற்றும் உற்சவ மரபினர் செய்து வருகின்றனர்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கருணை ஒன்றையே வாழ்க்கை நெறியாக கொண்டு வாழ்ந்த வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார் பிறந்த ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பூமிநீளா புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் ... மேலும்
 
temple news
கோவை : புரட்டாசி மாதம் மூன்றாவது சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு இன்று கோவை மதுக்கரை மலை மேல் ... மேலும்
 
temple news
கடலாடி: கடலாடி அருகே மலட்டாற்று பகுதியில் இயங்கி வரும் பிரபஞ்ச ஆற்றல் நல்வாழ்வு மைய ஆசிரமத்தில் ருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar