ஹம்ச வாகனத்தில் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் வீதி உலா
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29மே 2026 04:05
காஞ்சிபுரம் ; வைகாசி பிரம்மோத்சவத்தின் இரண்டாம் நாளான இன்று காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் ஹம்ச வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயில் வைகாசி பிரமோற்சவம் நேற்று வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி, தினமும் காலை, மாலையில் வெவ்வேறு வாகனங்களில் பெருமாள் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாளிக்கிறார். விழாவின் இரண்டாம் நாளான இன்று காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் ஹம்ச வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவையொட்டி, கோயில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.