Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அச்சிறுபாக்கம் முத்துமாரியம்மன் ... பந்தலூர் முருகன் கோவில் கும்பாபிஷேகம்; ஜப்பான் பக்தர்கள் பங்கேற்பு பந்தலூர் முருகன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோதண்டராமர் சுவாமி கோவிலில் கும்பாபிஷேக விழா கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கோதண்டராமர் சுவாமி கோவிலில் கும்பாபிஷேக விழா கோலாகலம்

பதிவு செய்த நாள்

29 மே
2026
04:05

திருவாலங்காடு; நெடும்பரம் கோதண்டராமர் திருக்கோவிலில், ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா, இன்று கோலாகலமாக நடந்தது.


திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான கோதண்டராமர் சுவாமி திருக்கோவில், கனகம்மாசத்திரம் அடுத்த நெடும்பரம் கிராமத்தில் அமைந்துள்ளது. இக்கோவிலில், வேறெங்கும் காண முடியாதபடி, மூலவர் சன்னிதியில், ராமர், சீதைக்கு உபதேசம் செய்யும் வகையில், வால்மீகி முனிவர் அமைந்திருக்கிறார். ராமர், வில் இன்றி இருப்பது சிறப்பு. இக்கோவிலில், 2001ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்த நிலையில், 20 ஆண்டுகள் கடந்து விட்டதால், கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, கடந்த ஓராண்டாக கோவில் குளம், கர்ப்பகிரஹம், அர்த்தமண்டபம், மகாமண்டபம் உள்ளிட்டவை புனரமைக்கப்பட்டன. திருப்பணிகள் முடிந்த நிலையில், 25 ஆண்டுகளுக்கு பின், கடந்த 27ம் தேதி காலை 8:00 மணிக்கு, முதல் கால பூஜையுடன் விழா தொடங்கியது.


தொடர்ந்து யாகசாலை, கடஸ்தாபனம் செய்யப்பட்டது. நேற்று, சதுர்ஷ ஆராதனம், மஹா ஷாந்தி ஹோமம் செய்யப்பட்டது. இதையடுத்து, நேற்று காலை 8:30 மணிக்கு கலச புறப்பாடும், உற்சவர் ஆலய உலாவும் நடந்தது. பின், 8:40 மணிக்கு, கோபுர கலசங்கள் மீது புனித நீர் ஊற்றி, மஹா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. இதில், திருத்தணி முருகன் கோவில் இணை ஆணையர் ரமணி, அறங்காவலர் குழு தலைவர் ஸ்ரீதரன் மற்றும் உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி இரண்டாம் நாள் சக்தி கொலுவில் மீனாட்சி அம்மன் ... மேலும்
 
temple news
மதுரை, மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் இன்று பெரிய சேஷ ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar