Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காமன்கோட்டை இருளாயி அம்மன் ... திருநள்ளாறு சனீஸ்வர பகவான் தங்க காக வாகனத்தில் வீதியுலா திருநள்ளாறு சனீஸ்வர பகவான் தங்க காக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அலகுமலையில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அலகுமலையில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலம்

பதிவு செய்த நாள்

30 மே
2026
03:05

பொங்கலூர்: அலகுமலை ஸ்ரீ முத்துக்குமார பால தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா நேற்று மாலை வெள்ளிக்கிழமை மஞ்சள் பிள்ளையார் வழிபாட்டுடன் துவங்கியது. பூர்வாங்க பூஜைகள் நடத்தப்பட்டது. 1,108 புதிய கலசங்கள் வாங்கப்பட்டு, ஒவ்வொரு கலசத்திலும் முருகப்பெருமானை எழுந்தருளச் செய்யப்பட்டது. ஸ்கந்த, வேத, காயத்ரி, மூல, மாலா, ரகசிய மந்திரங்களால் ஜபம் செய்யப்பட்டது. விசேஷ உபசார பூஜை, மகா தீபாராதனை நடந்தது. இன்று காலை, 1,108 கலச பூஜை துவங்கியது. பல்வேறு மந்திரங்கள் ஓதி சிவாச்சாரியார்கள் யாகத்தை நடத்தினர். 96 விதமான மங்கல மூலிகை பொருட்கள் பயன்படுத்தப்பட்டது. அருள் சக்தியூட்டப்பட்ட, 1,108 புதிய கலசங்கள் வைத்து பூஜிக்கப்பட்டு கலசாபிஷேகம் நடத்தப்பட்டது. வள்ளி தெய்வானை சமேதகராக முத்துக்குமார பாலதண்டாயுதபாணி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பாலதண்டாயுதபாணி அருள் பெற்றனர். பின்,தங்க தேரோட்டம் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புட்டபர்த்தி: பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு விழாவையொட்டி நடைபெற்ற இரண்டு நாள் அகில இந்திய ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: செங்கல்பட்டு ஓசூரம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா, இன்று  நடந்தது.செங்கல்பட்டு அருகே ... மேலும்
 
temple news
நாகப்பட்டினம்: நாகையில் பிரசித்திப் பெற்ற பழமையான, சௌந்தரநாயகி அம்பாள் உடனுறை சொர்ணபுரீஸ்வர சுவாமி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: கோனேரிராஜபுரம் அருகே சிவனாரகரம்  சுயம்பேஸ்வரர் சுவாமி கோயிலில் நடந்த சத்ரு சம்ஹார வேல் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில், கார்த்திகை மாத முதல் ‘கடை ஞாயிறு விழா’ இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar