Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வேலுண்டு வினையில்லை... மயிலுண்டு ... சொல்லிக் காட்டாதே
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
செங்குருதி சேயோனே... வங்கொடிய வேலோனே!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
செங்குருதி  சேயோனே... வங்கொடிய வேலோனே!

பதிவு செய்த நாள்

30 மே
2026
03:05

முருகப் பெருமான் அவதரித்த திருநாளான வைகாசி விசாகம், முருகப் பெருமானின் அருளை பரிபூரணமாக பெறுவதற்குரிய நாளாக கருதப்படுகிறது. வைகாசி விசாகம் நாளில் விரதம் இருந்து வழிபட்டால் நினைத்த காரியங்கள் நிறைவேறும், திருமணம், குழந்தை வரம், வெற்றி ஆகியவை கிடைக்கும் என பக்தர்களால் நம்பப்படுகிறது. இந்த ஆண்டு வைகாசி விசாகம் இன்று கொண்டாடப்படுகிறது.

வைகாசி விசாக நாளில் விரதம் இருந்து, முருகப் பெருமானை வழிபட்டால் வாழ்க்கையில் மாற்றம் வரும், வேலை, தொழில் ஆகியவை சிறக்கும், வெற்றிகள் கிடைக்கும் என சொல்லப்படுகிறது. வைகாசி விசாகம் அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் முழு உபவாசமாக இருந்து, பால் குடம் ஏந்தி, பாத யாத்திரையாக வந்து வழிபடுவார்கள். அனைத்து முருகன் கோவில்களிலும் பக்தர்கள் கூடி, சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடத்துவார்கள். ஆனால் வைகாசி விசாகம் அன்று விரதம் இருக்க நினைக்கும் அனைவராலும் இந்த நாளில் விரதம் இருக்க முடியாது. அப்படி விரதம் இருக்க முடியாதவர்கள் என்ன செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

விரதம் இருக்க முடியாதவர்கள் செய்ய வேண்டியவை

வைகாசி விசாகம் அன்று விரதம் இருக்க முடியாதவர்கள் காலையில், 6:00 மணிக்கு முன்பாக எழுந்து, குளித்து விட்டு, அருகில் இருக்கும் முருகன் கோவிலுக்கு சென்று வழிபட்டு விட்டு வரலாம். முருகன் கோவிலில் ஆறு விளக்குகள் ஏற்றி வைத்து, மனதார வேண்டிக் கொள்ளலாம். வைகாசி விசாகத்திற்கு முன் எத்தனை நாட்கள் முடிகிறதோ அத்தனை நாட்கள் இந்த வேண்டுதலை செய்யலாம். மற்ற நாட்களில் செய்ய முடியாவிட்டாலும் வைகாசி விசாகம் அன்று ஒரே ஒரு நாள் மட்டும் இந்த வழிபாட்டினை செய்யலாம்.

இந்தாண்டின் சிறப்பம்சமாக, விசாகம் நட்சத்திரமும், பவுர்ணமியும் இணைந்து வந்துள்ளது. அதனால், வைகாசி விசாகத்திற்கு முன் முருக வழிபாட்டினை செய்ய முடியாதவர்கள், இன்றும், நாளையும் முருகப் பெருமானை வேண்டி இந்த வழிபாட்டினை செய்யலாம். தினமும் காலை, மாலை இரு வேளைகளும் வீட்டில் உள்ள முருகன் படத்திற்கு முன்பாக விளக்கு ஏற்றி வைத்து, "ஓம் சரவண பவ" என்ற ஷடாக்ஷர மந்திரத்தை 108 முறை சொல்லி வழிபடலாம். அல்லது கைகளால் எழுதலாம்.

முருகன் கோவிலுக்கு தேவையான பூஜை மற்றும் அபிஷேகப் பொருட்கள் வாங்கிக் கொடுக்கலாம். வைகாசி விசாகம் அன்று முருகனுக்கு பால் அபிஷேகம் செய்வது விசேஷம் என்பதால் பால் குடம் எடுக்க முடியாவிட்டாலும், முருகனின் அபிஷேகத்திற்கு பால் வாங்கிக் கொடுப்பது மிகவும் சிறப்பானதாகும். உங்களால் எத்தனை பேருக்கு முடியுமோ அத்தனை பேருக்கு அன்னதானம் வழங்கலாம்.

பாத யாத்திரையாக முருகப் பெருமானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு தண்ணீர் கொடுத்து உதவலாம். முருகனுக்காக விரதம் இருந்து வரும் பக்தர்களுக்கு செய்யும் இந்த தொண்டு, வைகாசி விசாகம் அன்று விரதம் இருக்க முடியாவிட்டாலும் விரதம் இருந்து, முருகனை வழிபட்ட பலனை தரும்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

உயிர்களை நேசி செப்டம்பர் 29,2026

* உயிர்களை நேசி. அப்போது தான் அவனின் கருணையை பெறுவாய். * ஒருவரின் குணத்தை அறிய விரும்பினால் அவரது நண்பரை ... மேலும்
 

வேண்டாமே ஆணவம் செப்டம்பர் 29,2026

பலர் கூடும் இடத்தில் ஆடம்பர ஆடை அணிந்து இறுமாப்புடன் நடந்தார் ஒருவர்.  ‘நான்’ என்னும் அகந்தை அவரது ... மேலும்
 

பசித்தவருக்கு உணவிடு செப்டம்பர் 29,2026

பசி மிக கொடுமையானது. பசி வந்தால் மனம், உடல் என்ன பாடுபடும் தெரியுமா... பசித்தவருக்கு உங்களால் ... மேலும்
 

காத்திருக்கு பதவி செப்டம்பர் 29,2026

* உங்கள் குழந்தைகளுக்கு முத்தம் கொடுங்கள். ஒவ்வொரு முத்தத்திற்கும் சொர்க்கத்தில் பதவி ... மேலும்
 

நுாறில் ஒரு பங்கு செப்டம்பர் 29,2026

இறைவன் அன்பை நுாறாகப் பங்கிட்டான். அதில் 99 பங்கைத் தன்னிடம் வைத்துக் கொண்டான். மீதியிருக்கும் ஒரு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar