திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கொளுத்தும் வெயிலில் குவிந்த பக்தர்கள்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30மே 2026 04:05
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பவுர்ணமி யொட்டி, நீண்ட நேரம் வரிசையில் கொளுத்தும் வெயிலில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவிலில் மலையை சுற்றி உள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். வைகாசி பவுர்ணமி இன்று மதியம் 12.50 மணிக்கு பவுர்ணமி தொடங்கி, நாளை (31ம் தேதி) மதியம் 2.41 மணிக்கு நிறைவு பெறுகிறது. இதனை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து வழிபட்டனர். பவுர்ணமி யொட்டி, நீண்ட நேரம் வரிசையில் கொளுத்தும் வெயிலில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். வரிசையில் வரும் பக்தர்களுக்கு, குளிர்ச்சியாக ஐஸ்மோர் வழங்கப்பட்டது