Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருத்தணி விஜயராகவ பெருமாள் கருட ... ரிஷிவந்தியம் கோவில்களில் வைகாசி விசாகம் சிறப்பு பூஜை ரிஷிவந்தியம் கோவில்களில் வைகாசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாடலீஸ்வரர் கோவிலில் தேர் திருவிழா; வடம் பிடித்து இழுத்து பக்தர்கள் தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பாடலீஸ்வரர் கோவிலில் தேர் திருவிழா;  வடம் பிடித்து இழுத்து பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

30 மே
2026
04:05

கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.


கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழா கடந்த, 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சிறப்பு பூஜைகள், வீதியுலா நடந்து வருகிறது. கடந்த 26ம் தேதி அதிகார நந்தி கோபுர தரிசனம், தெருவடைச்சான் உற்சவம் நடந்தது.  இன்று காலை மூலவர் பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. அலங்கார மண்டபத்தில் பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, யாத்ராதானம் முடிந்து 24 கால் மண்டபத்தில் பஞ்சமூர்த்திகள் சிலைகளை வைத்து தீபாராதனை நடந்தது.  பின், கோவில் உள்பிரகாரம் வலம் வந்து, கோவில் முன் மண்டபத்தில் எழுந்தருளினர். வாத்தியங்கள் முழுங்க பெரிய தேரில் விநாயகர், சண்டிகேஸ்வரர், சோமஸ்கந்தர் எழுந்தருளினர். பராசக்தி அம்மன் அம்மன் சிறிய தேரிலும், மற்றொரு சிறிய தேரில் முருகனும் எழுந்தருளினர். 


அமைச்சர் ராஜ்குமார் தேரை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தார். விஷ்ணு பிரசாத் எம்.பி., ஹிந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஜோதி, உதவி ஆணையர் சிவக்குமார், கோவில் செயல் அலுவலர் முத்துலட்சுமி உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர். நாகராஜ் குருக்கள் தலை தமையிலான குருக்கள் பூஜைகளை செய்தனர்.  தேரடி வீதி, சங்கர நாயுடு வீதி, சஞ்சீவி நாயுடு வீதி, போடி செட்டித்தெரு வழியாக தேர் சென்று மீண்டும் நிலையை வந்தடைந்தது. இரவு தேரில் இருந்து இறங்கி தேரடியில் மண்டகப்படி பூஜை, பஞ்சமூர்த்திகள் கோவிலை வந்தடைதல் நிகழ்வு நடந்தது.  நாளை காலை 9:00 மணிக்கு நடராஜர் தரிசனம், வீதியுலா, திருக்கல்யாணம், பஞ்சமூர்த்திகள் தீர்த்தவாரி நடக்கிறது. 1ம் தேதி இரவு தெப்பல் உற்சவம், 2ம் தேதி காலை திருஞானசம்பந்தர் ஞானப்பால் உண்ட ஐதீக நிகழ்ச்சி நடக்கிறது. 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
சிவனுக்குரிய பிரதோஷமும், சக்திக்குரிய கஜகௌரி விரதமும் ஒரே நாளில் வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது. ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: புரட்டாசி மாதம் முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் பிரகாரத்தில் ... மேலும்
 
temple news
திருநகர்: விளாச்சேரி அழகு நாச்சியம்மன் கோயில் அய்யனார் கோயிலில் புரட்டாசி பொங்கல் விழா நேற்று ... மேலும்
 
temple news
மாங்காடு; மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில், நவராத்திரி விழா வரும் 10ம் தேதி துவங்கி, அக்., 21ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar