Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நெய்வேலியில் காஞ்சி மகா பெரியவர் ...  இடித்து அகற்றப்பட்ட அகத்தீஸ்வரர் கோவிலில் திருப்பணி தொடங்காததால் பக்தர்கள் அதிருப்தி இடித்து அகற்றப்பட்ட அகத்தீஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மகா பெரியவரின் 132வது ஜெயந்தி விழா வேத பாராயணத்துடன் பக்தி பரவசம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 மகா பெரியவரின் 132வது ஜெயந்தி விழா வேத பாராயணத்துடன் பக்தி பரவசம்

பதிவு செய்த நாள்

01 ஜூன்
2026
08:06

சென்னை: மகா பெரியவரின் 132வது ஜெயந்தி விழா, மயிலாப்பூரில் நேற்று, வெகு விமரிசையாக நடந்தது.

காஞ்சி காமகோடி பீடத்தின், 68வது பீடாதிபதியும், பக்தர்களால் ‘மகா பெரியவா’ என அன்புடன் போற்றப்படுபவருமான, ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 132வது ஜெயந்தி விழா, மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில், நேற்று நடந்தது. மாலை 6:00 மணிக்கு, சிறப்பு பூஜை மற்றும் ஆரத்தியுடன், இவ்விழா தொடங்கியது. தொடர்ந்து, காசி ராமமூர்த்தி வாத்தியார் தலைமையில், வேத பாடகர் குழுவினர், யஜூர் வேத பாராயணம் செய்தனர்.

தொடர்ந்து, ‘மகா பெரியவாளும் குருகுஹனும்’ என்ற தலைப்பில், விஜயலட்சுமி சொற்பொழிவாற்றினார். மகா பெரியவரின் ஆன்மிக சிந்தனைகள், வேத தர்ம பாதுகாப்பிற்காக, அவர் ஆற்றிய அரும்பணிகள், சமுதாயத்திற்கு வழங்கிய வாழ்வியல் நெறிமுறைகள் ஆகியவை குறித்து, விரிவாக அவர் எடுத்துரைத்தார். ஜெயந்தி விழா நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள், தங்கள் குடும்பத்தினருடன் பங்கேற்றனர். விழாவில், பாரதிய வித்யா பவன் இயக்குநர் ராமசாமி, வேதபாட நிதி அறக்கட்டளை நிர்வாகி சரபேஸ்வரன் உட்பட பலர் பங்கேற்றனர். வேதபாட நிதி அறக் கட்டளை மற்றும் பாரதிய வித்யா பவன் இணைந்து, இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தன. 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 2ம் தேதி முதல் ஐந்து நாட்கள் நடைபெற்று வந்த ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வர சுவாமி கோவிலில், மழை வேண்டி வருண யாகம், வருண ஜபம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கருவறை அபிஷேகத்தில் கலந்துகொள்ளும் ... மேலும்
 
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 
temple news
மேலூர்: சூரக்குண்டில் எல்லா வளமும் கிடைக்க வேண்டி கிராமத்தினர் சுவாமி சிலை எடுத்தும், கிடாவெட்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar