பதிவு செய்த நாள்
01
ஜூன்
2026
10:06
ஜெயநகர்: காயத்ரி மஹா மந்திர ஜெப யக்ஞத்தால், ஜெயநகர் ஸ்ரீகாயத்ரி தேவி கோவிலில் பக்தி அலையை பக்தர்கள் உணர்ந்தனர்.
பெங்களூரு ஹலசூரு காயத்ரி பரிவார் சார்பில், 2010 ம் ஆண்டில் இருந்து, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 7:00 மணி முதல் 9:00 மணி வரை, காயத்ரி மஹா மந்திர ஜெப யக்ஞம் நடத்தப்படுகிறது. ஜெயநகரில் உள்ள ஸ்ரீகாயத்ரி தேவி கோவிலில் நேற்று காயத்ரி மஹா மந்திர ஜெய யக்ஞம் வி.கே.கண்ணன் குருஜி தலைமையில் நடந்தது. சகல தேவதை மந்திரங்கள், காயத்ரி மஹா மந்திரத்தை அவர் ஓத, அவருடன் இணைந்து பக்தர்களும் மந்திரத்தை ஓதினர். இதனால் கோவிலில் பக்தி அலையை உணர முடிந்தது. கோவிலில் உள்ள காயத்ரி, விநாயகர், சுப்பிரமணியர் சிலைகளுக்கு வஸ்திரங்கள், அபிஷேக பொருட்களை, காயத்ரி பரிவார் அமைப்பினர் உபயம் அளித்தனர். காயத்ரி மந்திரத்தை தினமும் ஜெபிப்பதன் மூலம், மனிதர்கள் வாழ்வில் ஏற்படும் மகிமை, நற்பலன்கள் குறித்து வி.கே.கண்ணன் குருஜி விரிவாக விளக்கினார்